ads
அமெரிக்காவில் போலீஸ் குழுவிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற சிறுவன்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 17, 2020 22:01 ISTWorld News
கொரோனா வைரஸ் ஊரடங்கு உலகளவில் பல சிறுவர்களின் கனவுகளை பாதித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் உள்ள போலீஸ் அதிகாரிகள் ஒரு சிறுவனின் கனவுகளை நனவாக்க உதவினார்கள். அமெரிக்காவின் உள்ள பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், சிறுவர்கள் தங்கள் பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் கொண்டாட முடியவில்லை.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்று நோய் எதிர்த்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தங்கள் நகரத்தில் உள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்து, பொதுமக்களுக்கு முடிந்தவரை பாதுகாப்பைச் செய்கிறார்கள்.
இதேபோல் அமெரிக்காவில், ஒரு தந்தை தனது மகனின் பிறந்தநாளுக்காக உள்ளூர் காவல் துறையை அழைத்தபோது, முழுக் குழுவும் சைரன்களுடன் வந்து சிறுவனின் வீட்டின் முன் நிறுத்தி, தங்கள் ஸ்பீக்கர் மூலம் "பிறந்தநாள் வாழ்த்து" பாடி சிறுவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
What a good gesture.
— Riteish Deshmukh (@Riteishd) April 17, 2020
In USA, a father called Police and told it was his son's Birthday and no one came due to Covid-19. See the amazing response from Police! pic.twitter.com/CFmsD9TNVJ