ads
சமூக வலைத்தளங்களை முடக்கியது சிங்கள அரசு
கோகுல் சரவணன் (Author) Published Date : Mar 07, 2018 16:13 ISTWorld News
சமூக வலைத்தளங்களை முடக்கியது சிங்கள அரசு.
இலங்கையில் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய மதக்கலவரம் இரண்டு நாட்களுக்கு முன்னர் வலுவடைந்ததால் சிங்கள அரசு பத்து நாட்ட்களுக்கு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனமாக்கியது.அம்பாறை, கெண்டி, அகுரானா போன்ற இடங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது ஆகவே சில இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் இன்று அகுரானா பகுதியில் பௌத்தர்கள் சிறுபான்மையிரான இஸ்லாமியர்களின் கடைகள் மீது மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இன்று அகுரானா பகுதியில் நடந்த தாக்குதலில் இஸ்லாமியர் ஒருவரின் மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் கடை சூறையாடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அருகில் இருந்த ஏராளமான இஸ்லாமியர்களின் கடைகள் இன்றும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சிங்கள அரசு facebook, twitter, whatsapp, viber போன்ற சமூக வலைத்தளங்களை முடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு குறுஞ்செய்திகள் அனுப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும். கலவரம் மேலும் பரவமலிருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசு தெரிவித்துள்ளது.
சமுக வலைத்தளங்களில் பிரிவினைவாதிகள் தேவையில்லாத சலசலப்புகளை பரப்புவதாலும் கலவரம் பெரிதாகிக்கொண்டே போவதாலும் சிங்கள அரசு இம்முடிவை எடுத்துள்ளது எனவும், வலைத்தளங்கள் முடக்கத்திற்குப் பிறகு கெண்டி கலவரம் குறைந்துள்ளதாகவும் இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது.