ads
சிரிய அரசால் கொன்று குவிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்
வேலுசாமி (Author) Published Date : Feb 26, 2018 11:32 ISTWorld News
கடந்த ஆண்டு 2011 மார்ச் மாதம் சிரியாவில் அதிபர் பசால் ஆசாத் அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடங்கிய சண்டை தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிரிய அதிபரின் ஆதரவு படை நடத்திய தாக்குதலில் 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சோகம் என்னவென்றால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகள் தான். ஓடி விளையாடி மகிழ்ச்சியை அனுபவிக்க கூடிய பருவத்தில் மரணத்திற்கு பயந்து பாதுகாப்பான இடத்தை தேடி ஓடி கொண்டிருக்கின்றனர். இதற்கான புகைப்படங்களும் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைக்கிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சண்டையால் பாதுகாப்பான இடம், உண்ண உணவு, தண்ணீரின்றி அப்பாவி பொதுமக்களும் குழந்தைகளும் தவித்து வருகின்றனர். இந்த போரை 30 நாட்கள் நிறுத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலமாக பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு பொருட்களும் நிவாரண பொருட்களும் கிடைக்கும்.
ஆனால் இதன் பின்பும் ஆதரவு படைகள் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த போர் நிறுத்தம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரம பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களால் உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு மோசமான உயிரிழப்புகள் நேர்ந்து வருகிறது. இன்னும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.