ads
ஐன்ஸ்டின் பிறந்த நாளில் மறைந்த இயற்பியல் வல்லுநர் ஸ்டீபன் ஹாக்கிங்
வேலுசாமி (Author) Published Date : Mar 14, 2018 11:47 ISTWorld News
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் மாநகரத்தை சேர்ந்த இரண்டாவது ஐன்ஸ்டின் என உலக மக்களால் கருதப்படும் ஸ்டிபன் ஹாக்கிங் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இன்று இயற்பியல் வல்லுனரான ஐன்ஸ்டின் பிறந்த தினமாகும். ஐன்ஸ்டின் பிறந்த நாளில் கணித பேராசிரியரான ஸ்டிபன் ஹாக்கிங் உயிரிழந்தது உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய மறைவிற்கு உலக மக்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தன்னுடைய 21 வது வயதில் திருமணமாவதற்கு முன்பு அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) எனப்படும் குணப்படுத்த முடியாத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் முதலியன பாதிக்கப்பட்டு தனது பேச்சு திறமையும் இழந்தார்.
இதனால் இவருக்கு கணினி பேச்சு தொகுப்பு மூலம் மற்றவர்களுடன் உரையாடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் இவர் மனமுடையாமல் அண்டவியல் மற்றும் குவாண்டம் கோட்பாடு போன்றவைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர் உலகத்தில் உள்ள சோம்பேறி மனிதர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
இயற்பியல் கணிதத்தை எளிய முறையில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலரை பரிசாக அமெரிக்காவின் அனென்பெர்க் அறக்கட்டளை அறிவித்தது. இயற்பியல் வல்லுனரான இவர் இந்த சவாலை ஏற்று 26 மணி நேரம் ஓடக்கூடிய 'காலம் ஒரு வரலாற்று சுருக்கம்' என்ற பாடத்திட்டத்தை உருவாக்கி பரிசு பெற்றார்.
இந்த பாடத்திட்டத்தை 2000-ஆம் ஆண்டில் தமிழ் மொழி அறக்கட்டளை மூலம் ஒரு கோடி செலவில் தமிழில் மொழி பெயர்க்கபட்டது. மேலும் உலகம் முழுவதும் இவர் எழுதிய "A Brief History of Time" மற்றும் "The Universe in a Nutshell" போன்ற நூல்கள் விற்பனையில் சாதனையை நிகழ்த்தியது. இவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டே பல வியக்கத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இவர் லூக்காசியன் கணித பேராசிரியராக 1979 இல் பணியமர்த்தப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். மரணத்தை எதிர்த்து 50 வருடங்களுக்கு மேலாக போராடிய இவர் தன்னுடைய 76 வது வயதில் கேம்ப்ரிட்ஜ் இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.