ads

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கும்

வளர்ந்து வரும் உலகமயமாதல் மற்றும் காடுகள் குறைப்பினாலும் ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது

வளர்ந்து வரும் உலகமயமாதல் மற்றும் காடுகள் குறைப்பினாலும் ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது

வளர்ந்து வரும் உலகமயமாதல் மற்றும் காடுகள் குறைப்பினாலும் ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தொழிற்சாலைகளாலும் சுற்றுசூழல் சுகாதாரமும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இவை மனிதர்களின் ஒழுங்கற்ற செயல்பாடுகளில் உருவானது. இந்த உலகத்தில் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்களான நில நடுக்கம், சுனாமி போன்றவைகளுக்கும் மனிதனின் செயற்பாடுகளே காரணம்.

இந்த பூமியை மனிதனும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக குடைந்து குடைந்து பூமியின் மறு புரத்திற்கே சென்று விடுவான். மக்களும் தொழில் நுட்பங்களை விரும்புகிறார்களே தவிர ஒவ்வொரு நவீன தொழில் நுட்பமும் பூமியை அழித்து உருவாக்கப்பட்டவை என்பதை மக்கள் எப்போதும் நினைத்து பார்த்ததில்லை. கனிமங்களும் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியும் ஒவ்வொரு நாளும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் பூமியின் அழிவை விரைவில் மனிதகுலம் சந்திக்க போகிறது. முந்தைய காலங்களில் இருந்த பருவ காலங்களும், வெப்பத்தின் அளவும் தற்போது மாறியுள்ளது. இதனை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் காடுகளின் அழிப்பும், விவசாயத்தின் முக்கியத்துவமும் குறைந்து கொண்டே வருகிறது, இதனால் மழை பொலிவு இல்லாமையும், வெப்பநிலை அதிகரிப்பும் வரலாறு காணாத அளவிற்கு மோசமான சூழ்நிலையை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தண்ணீர் பிரச்சனையும், வெப்பநிலை பாதிப்பும் மக்களை வாட்டி வதைக்கிறது. இத்தகைய பருவ கால மாற்றங்களினால் முந்தைய காலங்களை விட கடுமையான பனிப்பொழிவு, கோடைகாலங்களில் அதிகப்படியான வெப்பநிலையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதற்கு பூமியின் வெப்பமயமாதலே காரணம். முந்தய ஆண்டுகளை விட கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போது இந்த வருடமும் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வானிலை மையம் வெப்பநிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்போது கடந்த 30 ஆண்டுகளை விட 0.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை மாற்றமானது ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடைகாலத்தின் துவக்கத்தில் வெயிலின் அதிகப்படியான தாக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். இது போன்ற நிலை நீடித்தால் தண்ணீர் பிரச்சனையும், வெப்பநிலையால் மக்களின் பாதிப்பையும் நினைத்து மக்கள் வேதனை அடைகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கும்