ads

கோவை அருகில் தங்க தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

sri padmaraj jewellery coimbatore

sri padmaraj jewellery coimbatore

கோவை நகரத்திற்கு அருகே ஆர்.எஸ்.புரத்தில் ரவிசங்கர் இயக்கிவரும் 'ஸ்ரீ பத்மராஜா ஜூவல்லரி' தொழிற்சாலையில் தங்கத்தை சுத்திகரிக்கும் பணி நடைபெற்று வருகிரது. இந்த சுத்திகரிப்பு பணியில் பல வகையான வேதி பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் இந்த வேதி பொருள்களின் கழிவு நீர் செல்வதற்காகவே ஒரு பெரிய தொட்டி அதன் அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வேதி பொருளுடன் தங்க துகள்களும் சேர்ந்து வருவதால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அந்த தொட்டியை சுத்தம் செய்து அதில் உள்ள தங்க துகள்களை பிரித்தெடுப்பது வழக்கம். 

அதன்படி நேற்று இரவு தொட்டியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்றது. இந்த வேளையில் தொழிற்சாலையை சேர்ந்த கவுரிசங்கர், ஏழுமலை, ராதாகிருஷ்ணன் என்ற மூன்று நபர்கள் ஈடுபட்டனர். முதலில் தொட்டியில் உள்ள நீரை வெளியேற்றி அதன் பின் தொட்டிக்குள் கவுரிசங்கர், ஏழுமலை என இரு நபர்கள் இறங்கினர். தொட்டியில் இறங்கிய சில நிமிடங்களில் இருவரையும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறியாமல் தொட்டிக்கு வெளியே நின்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் கூச்சல் போட்டு உள்ளார்.

சத்தத்தை கேட்டு அங்கு வந்த தொழிற்சாலையின் காவலாளி சூர்யா தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரையும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தொட்டியில் இருந்து மூவரையும் மீட்டுள்ளனர். அதில் கவுரிசங்கர், ஏழுமலை இருவரும் மரணமடைந்தது, சூர்யா மயங்கிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் சூர்யாவை கைவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலை 4.30 மணிக்கு உயிரிழந்தார்.  

இந்நிலையில் காவல் துறை அதிகாரிகள் விசாரித்ததில் இறந்து போன மூன்று நபர்களும் 28  வயதுக்குட்பட்டவர்கள் என்றும், தொட்டிக்குள் இறங்கும் போது தேவையான உபகரணங்கள் பயன்படுத்தாததும் விசாரணையில் தெரிவந்தது.   

கோவை அருகில் தங்க தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி