ads

அமேசான் காட்டில் 22 வருடங்களாக தனி மனிதனாக வாழ்ந்துவரும் பழங்குடி மனிதன்

தன்னுடைய இனம் முழுவதும் கொல்லப்பட்ட பிறகு அமேசான் காட்டில் தனி ஆளாக வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய இனம் முழுவதும் கொல்லப்பட்ட பிறகு அமேசான் காட்டில் தனி ஆளாக வாழ்ந்து வருகிறார்.

உலக மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் மக்கள் தொகை 7.6 பில்லியனை தாண்டி விட்டது. அதிகரித்து கொண்டே வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள், நிலங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காடுகளில் வாழ்ந்து வரும் உயிரினங்கள், பழங்குடியினர் அழிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இன்னும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் பழங்குடி மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இங்கு ஒருவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தனி ஒரு ஆளாக அமேசான் காட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் இருக்கும் இடத்தை சுற்றி தனியார் பண்ணைகள், அழிக்கப்பட்ட காட்டு பகுதிகளும் இருக்கின்றன. இதனால் இவர் வசித்து வரும் பகுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பழங்குடி இனத்தவரான இவர் தன்னுடைய இனம் அழிக்கப்பட்ட பிறகும் தனி ஆளாக நிமிர்ந்து ஆயுதம் ஏந்திய படையை எதிர்த்து போராடி வருகிறார்.

இவரை கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து புனாய் அமைப்பு கண்காணித்து வருகிறது. பெயரிடப்படாத இவருடைய இனத்திற்கு இவரே கடைசி ஆளாக இருக்கிறார். இவருக்கென்று எந்த மொழியும் கிடையாது. தற்போது புனாய் அமைப்பு இவர்தனது கோடாரியால்  மரம் வெட்டுவது போன்ற ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது. வெளியான ஒரு வாரத்தில் 2 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்து உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. தற்போது இந்த விடியோவை புனாய் அமைப்பு வெளியிட என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

அமேசான் காட்டில் 22 வருடங்களாக தனி மனிதனாக வாழ்ந்துவரும் பழங்குடி மனிதன்