ads

சிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்

சிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்

சிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்

சிரியாவில் பல நூற்றுக் கணக்கில் அந்நாட்டு மக்கள் கொல்லப்படுவதற்குக் ரசியாவும், ஈரானும் அந்த மிருகம் பஷார் அல் ஆசாதிற்கு துணை நிற்பதே கரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பகிரங்கமாக பதிவித்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை சிரியாவின் ஹோம்ஸ் என்ற இடத்தில் இயங்கி வரும் அந்நாட்டின் விமான படைத்தளம் ஒன்று கடுமையான ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் பல நூறு பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

அதுமட்டும் அல்லாமல் இந்தத் தாக்குதலுக்கு கரணம் அமெரிக்காதான் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளன விமான படைத்தளம் பல நூறு ரஷ்யா வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ரஷ்யா போர் விமானங்களை நிறுத்தி வைக்கவும், ஆசதிற்கு எதிரான புரட்சி படைகள் மீது தாக்குதல் நடத்தவும் ரஷ்யா  பயன்படுத்திக்கொள்ள சிரியா அனுமதித்திருந்தது. இத்தாக்குதலுக்கு முந்தைய நாள் அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்த ட்விட்டை கணக்கில் கொண்டு அமெரிக்காதான் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது என்று சிரியாவின் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிற்று கிழமை அன்று தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் சிரியா இராணுவத்தின் இராசயநத்  தாக்குதலுக்கு உள்ளன பகுதிகளில் உள்ள மக்களுக்கு தகுந்த மருத்துவ உதவிகள் கூட கிடைக்க வழிவகை செய்யப்படவில்லை. அப்பகுதிகள் அனைத்தும் ஆசாத்தின் ராணுவ படைகளால் சூழப்பட்டுள்ளது இதனால் ஏற்கனவே கொடுமையின் உச்சத்திலிருக்கும் சூழ்நிலை இன்னும் மோசமடைந்துள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் அதிபர் விளாடிமிர் புடினும், ஈரானும், அந்த மிருக குணம் படைத்த ஆசதிற்கு உதவுவதே பல பிரச்சனைகளுக்கு கரணம் என்றும், இந்த குற்றத்திற்கு அவர்கள் தகுந்த விலை கொடுத்தாகவேண்டும் என்றும் கூறினார்.

அனால் இத்தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பென்டகன் திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் அந்நாட்டு விமானப்படை எந்தவித போர் பயிற்சியிலும் கூட ஈடுபடவில்லை இதனால் இத்தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

சிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்