ads

பூமியை தாக்கவுள்ள சீனாவின் டியாங்காங் 1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம்

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இரண்டு வாரங்களில் பூமியை தாக்கவுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இரண்டு வாரங்களில் பூமியை தாக்கவுள்ளது.

சீனாவின் டியாங்கோங் - 1 விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக சமீபத்தில் சீனா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்பேஸ் கட்டுப்பாடு இழந்து தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு மார்ச் ஏப்ரல் மாதங்களில் விழ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

தற்போது இதன் சரியான தேதி குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9.5 டன் எடை கொண்ட இந்த ஆராய்ச்சி நிலையம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை ஒரு தேதியில் பூமியை தாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. டியாங்கோங் - 1 எனப்படும் இந்த ஆராய்ச்சி நிலையம் சீனா அனுப்பிய முதல் ஆராய்ச்சி நிலையமாகும். ரஷ்யா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் இருந்தது.

இதன் பெயருக்கு சொர்க்கத்தில் ஒரு பேலஸ் என்பது பொருளாகும். தற்போது இதன் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில் சீனா கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டாலும் பயனில்லாமல் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையம் அமெரிக்கா, பிரான்ஸ், கிரிஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் சீனாவின் பல இடங்களில் விழ வாய்ப்புள்ளது.

விழும் வேகத்தை பொருத்தும் அப்போதைய சுற்றுசூழல் நிலைய பொருத்தும் இது மாறுபட வாய்ப்புள்ளது. விண்வெளியில் இருந்து பூமியில் விழும் எந்த பொருளும் அப்படியே விழுவதில்லை. பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த பின்னர் பாதி அல்லது முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விடுகிறது.

இதனால் 9.5 டன் எடை கொண்ட இந்த ஆராய்ச்சி நிலையம் பாதிக்கு மேல் எரிந்து சாம்பலானாலும் 500 பவுண்ட் வரை பூமியில் விழ வாய்ப்புள்ளது. விழும் வேகத்தை பொறுத்து சுற்றியுள்ள மக்களுக்கு எதுவேனாலும் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சீனா விண்வெளி நிலையம் டியாங்காங் 1சீனா விண்வெளி நிலையம் டியாங்காங் 1

பூமியை தாக்கவுள்ள சீனாவின் டியாங்காங் 1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம்