ads
உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே
வேலுசாமி (Author) Published Date : Apr 20, 2018 16:55 ISTWorld News
டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகுந்த செல்வாக்கு உடைய நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அதிக செல்வாக்கு மிகுந்த பிரபலங்களை ஆய்வு செய்து, 100 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் ஓலா கால் டாக்சி நிறுவனரான பவிஷ் அக்ரவால் மற்றும் மைக்ராசாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாதெள்ளா என்பவரும் இடம் பிடித்துள்ளனர்.
இவர்களுடன் இந்த டாப் 100 நபர்களின் பட்டியலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, ஹாலிவுட் நடிகையான நிகோலே ஹிட்மேன், வட கொரிய அதிபர் கிம்ஜாங், இங்கிலாந்து இளவரசரான பிரின்ஸ் ஹாரி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, லண்டன் மேயர் சாதிக் கான், சவுதி அரசர் முகமது பின் சல்மான், சீன அதிபர் ஜிங் பிங்,அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
முழு விவரங்களை அறிய SEE THE FULL LIST OF TOP 100 INFLUENCE PEOPLE