ads
550 ஆண்டுகளுக்கு முன்பு 140 குழந்தைகள் 200 இலாமா உயிரினங்களை கொன்று நடத்திய கொடூர நரபலி
வேலுசாமி (Author) Published Date : Apr 28, 2018 12:54 ISTWorld News
பெரு நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ட்ருஜில்லோ என்ற நகரம். இந்நகரத்திகடலோர பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1000 அடிக்கு கீழ் ஹூன்ச்சாகூட்டோ (Huanchaquito-Las Llamas) என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் நேஷனல் ஜியோகிராபிக் அமைப்பின் சார்பில் கேப்ரியல் ப்ரியீடோ (Gabriel Prieto) என்பவரின் தலைமையில் ட்ருஜில்லோ பல்கலைக்கழகத்தை (Universidad Nacional de Trujillo) சேர்ந்த குழுவும், ஜான் வெர்னோ (John Verano) என்பவரின் தலைமையில் ட்டுளேன் பல்கலைக்கழகத்தை (Tulane University) சேர்ந்த குழுவும் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவர்களின் இந்த ஆராய்ச்சியானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் மூலம் கிடைத்த ஏராளமான எலும்பு துண்டுகள் மற்றும் மண்டை ஓடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து பார்த்தனர். இந்த பரிசோதனை மூலம் இந்த பகுதியில் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி தந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடூர நரபலியில் 10 வயதிற்குட்பட்ட 140 குழந்தைகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ஒட்டக வகையை சேர்ந்த விலங்கான இலாமா என்ற விலங்குகள் புதைக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டு ஆராய்ச்சியாளர்கள் திகைத்து போனர்.
இந்த நரபலி தான் உலகில் அதிக எண்ணிக்கையில் உயிரினங்களை பறித்துள்ளது. பாரம்பரிய சடங்குகள் போன்றவற்றிற்காக இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நரபலி நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த பகுதியில் முன்னதாக மூன்று கோவில்களில் 3500 ஆண்டுகளுக்கு 70 விலங்குகள் 40 மனிதர்களை கொன்று நரபலி நடத்தியுள்ளனர். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நரபலியானது இதனையும் மிஞ்சி உலக அளவில் இடம் பிடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியில் நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வெளியிட்டது.