ads
உலகின் மிகப்பெரிய வைரம் 219.79 கோடிக்கு விற்பனை
வேலுசாமி (Author) Published Date : Nov 16, 2017 15:25 ISTWorld News
ஜெனிவாவில் கிறிஸ்டி எனும் நிறுவனம் உலகத்தின் மிக பெரிய வைரத்தை விற்கும் ஏலத்தை நடத்தியது. அதில் உலகிலுள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தற்போது வரை உலகின் மிக பெரிய வைரமான இது வெட்டியெடுக்கும் போது 404 காரட்டுகளை கொண்டிருந்தது. பின்னர் வடிவமைப்பின் போது இந்த முதல் தர வைரம் தீப்பெட்டியின் வடிவமைப்பு மற்றும் அளவில் மாற்றியமைக்கப்பட்டது. 163 காரட்டுகளை கொண்ட இந்த வைரம் 7 செ.மீ (2.7 அங்குலம்) நீளம் கொண்டது. இதன் வடிவமைப்பிற்கு மட்டும் 11 மாதங்கள் ஆனது.
ஏலத்திற்கு முன்னதாக இந்த வைரம் 193 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக 219.79 கோடிக்கு விற்பனையானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரம் ஆப்பிரிக்காவின் அங்கோலா பகுதியில் உள்ள லூலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தை வாங்கியவர் குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை.