இணையத்தில் கசிந்த காலா படத்தின் சண்டை காட்சி

kaala fight scene leaked

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் 'காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு முடிவு செய்து சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி 'காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.'கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் கூட்டணி இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 'காலா' படத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா, ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளனர்.


இணையத்தில் கசிந்த காலா படத்தின் சண்டை காட்சி