ads
ஐ.பி.எல்-லில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் இந்திய அணியில் இருக்கிறார்கள் - ஸ்ரீசாந்த் பரபரப்பு பேட்டி
ராதிகா (Author) Published Date : Nov 05, 2017 18:34 ISTஇந்தியா
Sports News
கடந்த 2015 -ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. தடை முடிந்த நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் இரு அணிகளும் விளையாட இருக்கிறது. இந்த அணிகளில் மறுபடியும் வீரர்கள் மாற்றம் ஏதும் இல்லாமல் விளையாடுவார்கள் என்று தகவல்கள் வெளியானது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் மற்றும் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கித் சவாண் போன்ற சிலர் மட்டும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து வாழ்நாள் தடை பெற்றனர்.
கிரிக்கெட்டை விட்டு விலகிய ஸ்ரீசாந்த் மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் வந்த தீர்ப்பில் பிசிசிஐ எதிர்த்து தலையிட முடியாது தடை வழக்கம் போல தொடரும் என்று தெரிவித்தது. இதனால் கோபமடைந்த ஸ்ரீசாந்த் பிசிசிஐ எதிர்த்து கருத்து தெரிவித்தார்.
தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் "என்னை மட்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறார்கள். என்னுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக தற்போது இந்திய அணியில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.