ads

தொழுநோய் ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்

national leprosy eradiction programme

national leprosy eradiction programme

நாடு முழுவதும் நேற்று (30-01-2018) மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி அவரது இறப்பை நினைவு கூறும் வகையில் ஏராளமான மக்கள், அரசியல் பிரமுகர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தி அவர்கள் தொழு நோயாளிகளுக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் நேற்று ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேசிய தொழுநோய் தினத்தையொட்டி நேற்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் சிறப்பு முகாம் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. தொழுநோயற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் தொழுநோய் முனைப்பு நடவடிக்கைகளை மும்முரமாக செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் " தொழுநோயால் பாதிக்கப்பட்டவரையும் மற்றவர்களைப் போல் சமமாக பார்க்க வேண்டும். காசுநோய் ஒழிக்க அரசு வேகமாய் எப்படி செய்து கொண்டிருக்கிறதோ, அதேபோல் இந்த தொழுநோயையும் தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது" என்று அவர் கூறியுள்ளார். இந்த தொழு நோயை முதன் முதலாக மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் 1873-ஆம் ஆண்டு கண்டறிந்தார். எனவே இதற்கு ஆன்சன் நோய் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. தொழுநோய் என்பது புறநரம்புகள் மற்றும் சுவாசக்குழாய்களில் ஏற்படும் நோய்களாகும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோரை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும், விரல்கள் உதிர்ந்தது போலக்காட்சித் தரும். இந்த நோயின் தாக்குதல் தீவிரமடைந்தால் உயிர் துரக்கும் நிலை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை இது தாக்குகிறது. மேலும் ஒருவரின் சுற்றுப்புற சுகாதாரம் இவற்றை வைத்து இந்த நோய் பெரும்பாலும் தாக்குகிறது. ஆகையால் ஒருவரின் இருக்கும் இடம், வீடு, கழிவறை போன்றவற்றை தூய்மையாக வைக்க மருத்துவர்கள் ஆலோசனை செய்கின்றனர்.

இது தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. தொழுநோயை குட்டம், பெருவியாதி, மேகநீர், மேகநோய் என தமிழ்நாட்டில் இதற்கு வேறு பெயர்கள் உள்ளது. காற்றின் மூலமாகவே அதிகம் பரவும் இந்நோய், பாதிக்கப்பட்டோரின் மூலம் நேரடி தொடர்பு கொண்டு அவர் விடும் மூச்சு காற்றால் மற்றவர்களுக்கு பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவி பெரும்பாலான மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

மேலும் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை ஒட்டி கோயம்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவமனை தலைமை அதிகாரி தலைமையில் தொழுநோயற்ற உலகத்தை உருவாக்குவோம், காந்தியடிகளின் கனவை நனவாக்குவோம் என்று மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவராலும் உறிதி மொழி எடுக்கப்பட்டது. 

national leprosy eradication programmenational leprosy eradication programme
national leprosy eradication programmenational leprosy eradication programme
national leprosy eradication programmenational leprosy eradication programme

தொழுநோய் ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்