ads
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் கலைஞர்கள்
வேலுசாமி (Author) Published Date : Jan 26, 2018 12:27 ISTWorld News
இந்தியா
Sports News
இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளான, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்ம விபூஷன் விருதுகள் கலை மற்றும் கல்வி போன்ற துறைகளை சேர்ந்த தமிழ்நாட்டில் இசைஞானி இளையராஜாவுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முஸ்தபா கான் என்பவருக்கும், கேரளா மாநிலத்தை சேர்ந்த பரமேஸ்வரன் போன்ற மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பத்ம பூஷன் விருதுகள், சமூகம், கல்வி, விளையாட்டு, இசை, தொல்பொருள் போன்ற துறைகளை சேர்ந்த 9 கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த பத்ம பூஷன் விருதுகளில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட், ரஷ்யா, பீகார், மகாராஷ்டிரா, அமேரிக்கா போன்ற இடங்களில் உள்ள கலைஞர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் பத்ம ஸ்ரீ விருதுகள் 72 கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்ம ஸ்ரீ விருதுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்வி, சினிமா, ஆன்மிகம், யோகா, சமூக நலன்கள், இசை மற்றும் பல்வேறு விளையாட்டு துறைகளை சேர்ந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு கலைஞர்களுக்கு விருது வழங்க உள்ளது. அதன்படி, வன பாதுகாப்பு துறையில் ரோமுலஸ் வித்தகர் என்பவருக்கும், அறிவியல் பற்றும் பொறியியல் துறையில் ராஜகோபாலன் வாசுதேவன் என்பவருக்கும், கலை மற்றும் நாட்டுப்புற இசை துறையில் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் என்பவருக்கும், யோகா துறையில் கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் வி நானம்மாள் (98) என்பருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.