ads
மேரா பெலா ஸ்மார்ட்போன் திட்டத்தில் கைகோர்த்துள்ள ஏர்டெல் அமேசானின் புதிய சலுகை
விக்னேஷ் (Author) Published Date : May 18, 2018 15:29 ISTBusiness News
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் பிரபல வர்த்தக தலமான அமேசான் நிறுவனங்கள் இணைந்து 'மேரா பெலா ஸ்மார்ட்போன் (Mera Pehla Smartphone Offer)' என்ற புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அமேசான் வர்த்தக தளங்களில் வாங்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் 2600 வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்கவுள்ளனர். இந்த திட்டம் அமேசான் வர்த்தக தலத்தில் கிடைக்கும் சாம்சங், ஒன் ப்ளஸ், ரெட்மி, ஓனர், லினோவோ, எல்ஜி உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பொருந்தும். இந்த 2600 சலுகையை முதலில் 2000 ரூபாய் மற்றும் 600 ரூபாய் என வகையாக தருகின்றனர். இந்த திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள், - முதலில் அமேசான் இணையதளத்தில் உள்ள ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி வாங்க வேண்டும். - பின்னர் 2000 ரூபாய் கெஸ்பேக் பெற ஸ்மார்ட்போனை வாங்கிய 18 மாதத்திற்குள் ஏர்டெல்லில் 3500 மதிப்புள்ள திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்த பிறகு உங்களுக்கு 500 ரூபாய் கெஸ்பேக் வழங்கப்படும். - பிறகு அடுத்த 18 மாதங்களுக்குள் 3500 ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு 1500 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும். - அடுத்த 600 ரூபாய் சலுகையை பெற அமேசான் தலத்தில் மூலம் ஏர்டெல் ப்ரீபெய்டு மொபைல் எண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் ஏர்டெல் 169ரூபாய் திட்டத்தினை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் ஆலிமிடேட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 1GB இன்டர்நெட் போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. - இந்த ஏர்டெல் 169 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தவுடன் உங்களுடைய அமேசான் பே கணக்கில் 24 மாதங்களுக்கு 25 ரூபாய் வீதமாக மொத்தம் 600 ரூபாய் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.இப்படி நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை மேரா பெலா திட்டத்தில் வாங்குவதன் மூலம் 2600 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகளை பெறலாம். இந்த திட்டம் குறித்து வாடிக்கையாளர்கள் மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.amazon.in/www.amazon.in/b?ie=UTF8&node=14842078031
இந்த திட்டம் குறித்து ஏர்டெல் தலைமை அதிகாரி வணி வெங்கடேஷ் கூறுகையில் "உலகம் முழுவதும் எங்களுடைய 'மேரா பெலா ஸ்மார்ட்போன் (Mera Pehla Smartphone Offer)' திட்டம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த திட்டத்தினை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏராளமான மக்களின் ஸ்மார்ட்போன் கனவுகள் நிறைவுபெற்று டிஜிட்டல் மையமாகும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம் குறித்து அமேசான் நிர்வாக அதிகாரி நூர் படேல் கூறுகையில் "எங்களுடைய இந்த கூட்டணி மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் 4G தொழில்நுட்பம் நல்ல முன்னேற்றம் அடையும். இந்த திட்டத்தில் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறிப்பிட்ட காலம் வரையிலும் அமேசான் தலத்தில் செயல்பட உள்ளது." என அவர் தெரிவித்துள்ளார்.