ads

டேட்டா தீர்ந்தாலும் இனி கவலை இல்லை ஏர்டெல்லின் புதிய அதிரடி

தற்போதுள்ள டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் வேகம் டேட்டா தீர்ந்தவுடன் குறைந்து விடுகிறது. இதற்கு ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் வேகம் டேட்டா தீர்ந்தவுடன் குறைந்து விடுகிறது. இதற்கு ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜியோவிற்கு பிறகு அதிவேக இன்டர்நெட் டேட்டாவை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் மூலம் வழங்கி வருகிறது. சமீபத்தில் கார்ப்பரேட் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய 149 ரூபாய் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் மட்டுமின்றி இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், புது பயனாளர்களை கவரவும் ஒவ்வொரு நாளும் சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.

தற்போதுள்ள ஏர்டெல்லின் 199 ரூபாய் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு ஆலிமிடேட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் நாளொன்றுக்கு 1GB அளவிலான இன்டர்நெட் பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளில் அனுமதிக்கப்பட்ட டேட்டாவை முடித்த பின்னர் தானாகவே 128Kbs வேகத்தில் இருந்து குறைக்கப்படும். ஆனால் மத்திய அரசின் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் பேக் ஒரு நாளில் தீர்ந்தாலும் தொடர்ந்து அதே வேகத்தில் உபயோகப்படுத்த வாடிக்கையாளர்களை அனுமதித்து வருகிறது.

ஆனால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் பேக் தீர்ந்தவுடன் 128Kbs லிருந்து தாமாக 64Kbs வேகமாக குறைக்கப்பட்டு விடும். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் விதமாக 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளில் பயன்படுத்தும் இன்டர்நெட் அளவு தீர்ந்தாலும் தொடர்ந்து அதே வேகத்தில் உபயோகப்படுத்த அனுமதித்துள்ளது. இதனால் நிச்சயமாக வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள் என ஏர்டெல் நம்புகிறது. ஆனால் இன்டர்நெட் தீர்ந்தவுடன் உபயோகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் அளவுக்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது 

டேட்டா தீர்ந்தாலும் இனி கவலை இல்லை ஏர்டெல்லின் புதிய அதிரடி