ads

ஜியோ ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்லின் புதிய அதிரடி ஆபர்

ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 98 மற்றும் 99 திட்டங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய திட்டத்தினை களமிறக்கியுள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 98 மற்றும் 99 திட்டங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய திட்டத்தினை களமிறக்கியுள்ளது.

இந்தியாவின் மத்திய அரசு சொந்தமாக நடத்தி வரும் தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited - BSNL) கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 17 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது பிஎஸ்என்எல் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஏர்செல்லின் சரிவுக்கு பிறகு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு பிஎஸ்என்எல் பயனாளர்கள் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளது. இது தவிர வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தொடர்ந்து அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால் ஜியோவின் வருகைக்கு பிறகு பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபங்கள் பல மடங்கு சரிந்து விட்ட நிலையில் பிஎஸ்என்எல்  நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்ந்து எப்படியோ தாக்குப்பிடித்து வருகிறது.

தனது வாடிக்கையாளர்களுக்கு மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் இரவு 10:30 மணி முதல் காலை 5 மணி வரை இலவச வரம்பற்ற அழைப்புகள், சிறப்பு பொழுதுபோக்கு சலுகைகள் போன்ற பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தனது போட்டியாளர்களான ஜியோ ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய 118ரூ திட்டத்தினை அறிவித்துள்ளது. முன்னதாக ஜியோ நிறுவனம் 98 ரூபாயில் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள், நாளுக்கு 1GB இன்டர்நெட் போன்ற சேவையை 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கி வருகிறது.

இதே போன்று ஏர்டெல் 99 ரூபாய் கட்டணத்திலும், ஐடியா நிறுவனம் 109 ரூபாய் கட்டணத்திலும் 28 நாட்களுக்கான வேலிடிட்டியில் இலவச அழைப்புகள் இன்டர்நெட் சேவைகளை வழங்கி வந்த நிலையில் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் புதியதாக 118 திட்டத்தினை களமிறக்கியுள்ளது. இதன்படி மேற்கூறியது போன்று பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தில்வரம்பற்ற கால்களையும், நாளொன்றுக்கு 1GB அளவிலான இன்டர்நெட் பேக்கையும் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தினை தற்போது அதிக வாடிக்கையாளர்கள் இருக்கும் இடங்களான தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வரவேற்பினை பெற்றால் விரைவில் இந்த திட்டத்தினை இந்தியா முழுவதும் அமல்படுத்த உள்ளனர்.

ஜியோ ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்லின் புதிய அதிரடி ஆபர்