ads
நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்
விக்னேஷ் (Author) Published Date : May 22, 2018 16:54 ISTBusiness News
உலக நாடுகளில் முதன் முறையாக சீனா, நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு வாழ்காக்கை பாலம் (Magpie Bridge) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளுக்கு குய்ஹியாவா (Queqiao) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவால் அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியில் நிலவின் இருண்ட பகுதியை அடைய உள்ளது. இந்த செயற்கைகோளில் தொலைத்தொடர்பு துறை இணைப்பை வலுப்படுத்த ஆன்டனாக்கள், ரோவர் போன்ற கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் மூன்று ஆண்டுகள் ஆயுளை கொண்டுள்ளது. இதன் எடை 400 கிலோ. இந்த செயற்கைக்கோளானது நேற்று காலை 6 மணியளவில் லாங் மார்ச் 4ஸி என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கை கோள் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு நிலவின் இருண்ட பக்கத்தை சீனா ஆராய உள்ளது. பல துறைகளில் வெற்றிகளை கொண்டு வரும் சீனா, இந்த ஆராய்ச்சியின் மூலம் புதிய சாதனைகளை படைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட அரை மணிநேரத்திற்குள் சுற்றுவட்ட பாதையை அடைந்துள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 4,55,000KM தூரம் பயணம் செய்து நிலவின் இருண்ட பகுதியை அடையும். நிலவை அடைந்தவுடன் அங்குள்ள ஹாலோ என்ற சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு நிலவை ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஹாலோ சுற்றுவட்ட பாதையில் இருந்து நிலவை ஆய்வு செய்யும் முதல் செயற்கைகோளாக 'குய்ஹியாவா' திகழ்கிறது.