ads
ப்ளிப்கார்ட்டில் மொபைலில் இருந்து டிவிக்கு இணைக்கும் குரோம் கெஸ்ட் தள்ளுபடி விற்பனையில்
விக்னேஷ் (Author) Published Date : May 17, 2018 12:05 ISTBusiness News
இந்தியாவின் வர்த்தக தலமான ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாள்கள் என்ற திட்டத்தை கடந்த 13ஆம் தேதி துவங்கி 16-ஆம் தேதி நிறைவு செய்தது. இந்த திட்டத்தின் மூலம் பல முன்னணி சாதனங்கள், செல்போன்கள் மலிவான தள்ளுபடி விற்பனையில் கிடைத்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கவனத்தை பிக் ஷாப்பிங் டேஸ் பெருமளவு ஈர்த்தது. இதனை தொடர்ந்து தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளரை கவரும் விதமாக விற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது உலகம் முழுவதும் பிரபலமான குரோம் கெஸ்ட் இணைந்துள்ளது.
கூகுள் பொருளில் ஒன்றான குரோம் கெஸ்ட் (ChromeCast), ஆண்டிராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற இயங்கு தலத்தில் இருந்து டிவியை இணைக்கும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை டிவியில் உள்ள HDMI மற்றும் சர்விஸ் பின்களில் இணைத்து ஆண்டிராய்டு போன்ற இயங்கு தலத்தில் குரோம் கெஸ்டை செட்டப் செய்து லட்சக்கணக்கான செயலிகளையும் ஆண்டிராய்டு போனை உபயோகப்படுத்துவதையும் மிக பெரிய திரையான டிவியில் காணலாம். குரோம் கேஸ்ட்டை தங்களது டிவைஸில் செட்டப் செய்ய டிவியில் உங்களுக்கு குரோம் கெஸ்ட் கோட் (Code) காண்பிக்கப்படும்.
இந்த கோடை உபயோகப்படுத்தி குரோம் கெஸ்டை செட்டப் செய்து கொள்ளலாம். கூகுள் பொருளான இதனை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இந்த குரோம் கெஸ்ட் ப்ளிப்கார்ட்டில் 17சதவீத தள்ளுபடியில் 2,799 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் உண்மையான விலையான 3,399 இருந்து 600 ருபாய் தள்ளுபடியில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது.