ads

பிலிப் கார்டின் அதிரடி சலுகைகள்

flipkart new pinch days

flipkart new pinch days

வர்த்தக தளங்களில் முன்னணி இணைய தலமாக பிலிப் கார்ட் விளங்குகிறது. வாடிக்கையாளர்களை கவர பல்வேறு திட்டங்கள், சலுகைகளை வர்த்தக தளங்கள் வழங்கி வருகிறது. மக்களும் அதற்கேற்ப மாறிக்கொண்டே செல்கின்றனர். முன்னதாக பிலிப் கார்ட் நிறுவனம் 'பிக் ஷாப்பிங் சேல் (Big Shopping Sale)' என்ற திட்டத்தை டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை தொடங்கியது. இதன் மூலம் டிவி, மொபைல், லேப்டாப் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் சலுகையாக வழங்கி வந்தது. 

இதன்படி 1,02,000 ரூபாய் மதிப்பு கொண்ட ஆப்பிள் ஐ போன் எக்ஸ் 89,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு (SBI Credit Card) 5,000 ரூபாய் தள்ளுபடியும், ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. இந்த ஆபர் நிறைவடைந்ததால் தற்போது 'நியூ பின்ச் டேஸ் (New Pinch Days)' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.  இதன் மூலம் முன்னணி மொபைல்களான கூகுள், சாம்சங், எல்ஜி போன்ற மொபைல்கள் சலுகை விலையில் கிடைக்கிறது. மேலும் இதனுடன் மடிக்கணினி, கேமிரா மற்றும் மொபைலுக்கு தேவையான சாதனங்கள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி எல்ஜியின் GS மொபைல் 36,990 இல் இருந்து 31,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் லினோவோ K8 ப்ளஸ் 10,999 லிருந்து 8,999 ஆக தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்சி S7 மொபைல் 46,000 லிருந்து 24,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. முன்னதாக அறிவித்த 'பிக் ஷாப்பிங் சேல் (Big Shopping Sale)' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது  'நியூ பின்ச் சேல் (New Pinch Sale)' என்ற சலுகை திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பிலிப் கார்டின் அதிரடி சலுகைகள்