ads
ஆண்ட்ராய்டில் களமிறங்கும் பிலிப் கார்ட்
வேலுசாமி (Author) Published Date : Nov 13, 2017 18:36 ISTBusiness News
வியாபார உலகின் வர்த்தக தலத்தில் அமேசான், பிலிப் கார்ட், அலிபாபா போன்ற நிறுவனங்கள் முதல் இடத்தில உள்ளன. இதில் அமேசான் அமெரிக்கா நிறுவனமாகும், அலிபாபா நிறுவனம் சீனாவை சேர்ந்தது. இதில் பிலிப் கார்ட் நிறுவனம் பெங்களூரை சேர்ந்தது. இந்த நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியாளர்களையும் முந்தும் வகையில் பிலிப் கார்ட் நிறுவனம் தற்போது ஒரு ஸ்மார்ட் போனை அறிமுக படுத்தியுள்ளது. இந்த மொபைல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. இதனுடைய பாகங்கள் பெங்களூரில் தயாரித்து வருகின்றனர்.
இந்த ஸ்மார்ட் போனின் விலை 10990 ருபாய் ஆகும், 5.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போன 4ஜிபி ரேம் கொண்டது. மேலும் 64ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டது. இந்த மொபைல் வரும் 15ஆம் தேதி பிலிப் கார்ட் இணையதளத்தில் வெளிவிட இருக்கிறது. இந்த போனை வேறு எந்த தளத்திலும் பெற முடியாது. பிலிப் கார்ட் நிறுவனத்தின் இணையத்தில் மட்டுமே இது கிடைக்கும். இந்த போனின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. சாம்சங், எம்.ஐ போன்ற போன்களை இது கண்டிப்பாக மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இதன் அறிமுக விழா பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.