ரூ 397க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கு ரூ 3300 கேஷ்பேக் வழங்கும் ஐடியா

       பதிவு : May 25, 2018 11:49 IST    
இந்தியாவின் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா வாடிக்கையாளர்களை கவர தற்போது புதியதாக 3300 கேஷ்பேக் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா வாடிக்கையாளர்களை கவர தற்போது புதியதாக 3300 கேஷ்பேக் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதிரடி திட்டங்கள் மூலம் 2000க்கும் மேல் வரை கேஷ்பேக் சலுகையினை தனது பயனாளருக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஐடியா நிறுவனமும் புதிய திட்டத்தின் மூலம் கேஷ்பேக் சலுகையினை வழங்க களமிறங்கியுள்ளது. இந்தியாவின் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா 23 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது 40 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

ஆனால் ஜியோவின் வருகைக்கு பின்னர் பயனாளர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் சமீபத்தில் ஏர்செல் நிறுவனத்தின் வீழ்ச்சியால் ஐடியா பயனாளர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மேலும் வாடிக்கையாளர்களை கவர இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போட்டு புதிய திட்டங்களையும், கேஷ்பேக் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதியதாக 3300 கேஷ்பேக் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரூ 397க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3300 ரூபாய் கேஷ்பேக் சலுகையை உடனடியாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி ஐடியாவின் 398 திட்டத்தில் ரீசார்ஜ் செய்து இந்த கேஷ்பேக் சலுகையினை பெறலாம். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் நாளொன்றுக்கு 1.4GB அளவிலான டேட்டாவை 70 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கி வருகிறது.

 


ரூ 397க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கு ரூ 3300 கேஷ்பேக் வழங்கும் ஐடியா


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்