ads
ஐடியாவின் புதிய அதிரடி ரூ53க்கு 3GB ரூ92க்கு 6GB
வேலுசாமி (Author) Published Date : May 21, 2018 11:43 ISTBusiness News
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐடியா நிறுவனம், தற்போது தனது பயனாளர்களுக்கு புதியதாக இன்டர்நெட் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் பாரதி ஏர்டெல் இரண்டு இன்டர்நெட் ஆபர்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக ஐடியா நிறுவனமும் இரண்டு புதிய இன்டர்நெட் ஆபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 53க்கு 3GB அளவிலான டேட்டாவை ஒரு நாள் வேலிடிட்டியில் வழங்கவுள்ளது.
இதே போன்று 92 ரூபாய்க்கு 6GB அளவிலான இன்டர்நெட் டேட்டாவை 6நாட்கள் வேலிடிட்டியில் வழங்கவுள்ளது. இந்த புதிய ஆபர்கள் தற்போது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள பேக்கேஜை பொறுத்து மாறுபடும். உதாரணாமாக ஆலிமிடேட் காம்போ பேக்கில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இதனை பெறும் போது ஏற்கனவே இருக்கும் சலுகைகளுடன் புதிய ஆபரூம் இணைந்து வழங்கப்படும். ஐடியா நிறுவனத்தின் இந்த புதிய ஆபர்கள் பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம், 49ரூபாயில் 3GB டேட்டாவை ஒரு நாள் வேலிடிட்டியிலும், 92ரூபாயில் 6GB டேட்டாவை 7நாள் வேலிடிட்டியிலும் வழங்கி வருகிறது. இதே போன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, 11ரூபாய்க்கு 400MB டேட்டா, 21 ரூபாய்க்கு 1GB டேட்டா, 51 ரூபாய்க்கு 3GB டேட்டா மற்றும் 101 ரூபாய்க்கு 6GB டேட்டாவையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஐடியா நிறுவனத்தின் புதிய சலுகைகள் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.