ads

ஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்

ஜியோவின் 52ரூபாய் திட்டத்திற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் 39ரூபாய் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோவின் 52ரூபாய் திட்டத்திற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் 39ரூபாய் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited), 17 வருடங்களாக செயல்பட்டு 200 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. தனது பயனாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வரும் இந்நிறுவனம் சமீபத்தில் பயனாளர்களுக்கு 118 ரூபாய் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தனது போட்டியாளர்களான ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த திட்டத்தினை அறிமுகபடுத்தியுள்ளது. 28நாட்கள் வேலிடிட்டியில் வரம்பற்ற அழைப்புகள் நாளொன்றுக்கு 1GB அளவிலான டேட்டா போன்றவை அடங்கிய இந்த திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது 39ரூபாய் என்ற திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகளில், இலவசமாக உள்ளூர், STD அழைப்புகளை பெற்று கொள்ளலாம். இது தவிர 10 நாட்கள் வேலிடிட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் பிஎஸ்என்எல்லின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரோமிங் வசதி மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் போன்றவையும் வழங்குகிறது.

ஆனால் இந்த திட்டத்தில் இன்டர்நெட் குறித்து எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த திட்டம் ஜியோவின் 52ரூபாய் திட்டத்திற்கு போட்டிபோடும் விதமாக அமைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்த 52ரூபாய் திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளுடன், இலவசமாக ரோமிங் வசதியை 7நாட்கள் வேலிடிட்டியில் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக ஜியோ, நாளொன்றுக்கு 150MB டேட்டாவை 7நாட்கள் சேர்த்து மொத்தமாக 1GB அளவிலான இன்டர்நெட்டை உபயோகப்படுத்த பயனாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஜியோவிற்கு போட்டியாக இதர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோவின் 52ரூபாய் திட்டத்திற்கு போட்டியாக 36ரூபாயில் குறைந்த கட்டணத்தில் ஜியோவை விட அதிக வேலிடிட்டியில் இந்த சலுகையை வழங்கி வருகிறது.

ஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்