ads

சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி ச்மார்த்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பினை அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி ச்மார்த்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பினை அறிவித்துள்ளது.

பிரபல முன்னணி மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், மொபைல் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் புது புது அம்சங்களும், நீடித்து உழைக்கும் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதனால் வர்த்தக தளங்களிலும் ஷோ ரூம்களிலும் சாம்சங் நிறுவனத்தின் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அமோக உள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த சாம்சங் நிறுவனம் தன்னுடைய சில மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பினை அறிவித்துள்ளது.

இதன்படி சாம்சங்கின் J7 Nxt 32GB, Galaxy J2 2018, Galaxy J2 2017, Galaxy J7 Prime 2 போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலைகுறைப்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. இதில் 32GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் கொண்ட J7 Nxt 32GB ஸ்மார்ட்போன்கள் முன்னதாக 11641 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது 3சதவீதம் விலை குறைப்பில் ஜிஎஸ்டியுடன் 10990 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. அடுத்ததாக 16GB ஸ்டோரேஜ் மற்றும் 2GB ரேம் போன்ற அம்சங்கள் கொண்ட Galaxy J2 2018 ஸ்மார்ட்போனின் J250F என்ற மாடல் மொபைல்களுக்கு 3சதவீத விலைகுறைப்பில் ஜிஎஸ்டியுடன் 7690 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

முன்னதாக Galaxy J2 2018 ஸ்மார்ட்போன்கள் 7951 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதன் பிறகு கடந்த ஆண்டு வெளிவந்த Galaxy J2 2017 ஸ்மார்ட்போனின் J200GD என்ற மாடல் மொபைல்களுக்கும் அதே மூன்று சதவீத விலைகுறைப்பில் ஜிஎஸ்டியுடன் 6190 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Galaxy J7 Prime 2 ஸ்மார்ட்போன்கள் 13990 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 1000 ருபாய் விலைகுறைப்பில் 12990 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பின் மூலமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வீதம் மேலும் அதிகரிக்க உள்ளது.

சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்