ads

சாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற சாம்சங் கேலக்சி எஸ்8 மாடலுக்கு தற்போது கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையில் விற்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற சாம்சங் கேலக்சி எஸ்8 மாடலுக்கு தற்போது கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையில் விற்கப்பட்டு வருகிறது.

தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங், உலகின் மிகப்பெரிய குழுமங்களுள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. மின்னணு சாதனங்கள், கட்டுமானம், லைப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் உலகம் முழுவதும் 80 ஆண்டுகளாக தனது சேவையினை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பல மாடல் ஸ்மார்ட்போன்கள் தற்போதைய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் விதமாக புது புது அம்சங்களை சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 மாடலுக்கு  தற்போது வரையிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது கடந்த ஆண்டு வெளியான இந்த மாடல் விற்பனையிலும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது.

இப்படி பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 மாடலின் ஆரம்ப விலையானது இந்தியாவில் 57,900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வந்த இந்த மாடல், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிரடியாக விலை குறைக்கப்பட்டும் சலுகைகள் கொடுத்ததும் 45,990 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த மாடல் மே மாத சிறப்பு விற்பனையாக 8000 ரூபாய் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 தற்பொழுது விலை 37,990 ரூபாய் மட்டுமே. இந்த தள்ளுபடி சலுகையை பெற Paytm Mall தலத்தில் இந்த மாடலை வாங்க வேண்டும் அல்லது அருகில் உள்ள சாம்சங் கடையில் Paytm Mall மூலம் சுலபமான முறையில் பெற்றிட விற்பனையாளர்கள் உதவுவார்கள். பிறகு உங்களுடைய Paytm வாலட்டில் 8000 ரூபாய் சேர்க்கப்படும், இந்த பணத்தை பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிற பாகங்களை விலையின்றி வாங்கிக்கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 முக்கிய அம்சங்கள்- 4G LTE- S8 - 5.8-இன்ச் தொடு திரை (5.8inches AMOLED Display)- S8+ - 6.2-இன்ச் தொடு திரை (6.2inches AMOLED Display)- ஆண்ட்ராய்டு 7.1.1 (Nougat 7.0)- ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் (அமெரிக்கா மற்றும் சீனா)- எக்சினோஸ் 8895 (Exynos 8895) (இந்தியா)- ஆக்டோகோர் 2.3 & 1.7 Ghz பிராஸசர் (Octa-core 2.3 & 1.7 GHz Cortex-A53)- S8 - 4 ஜிபி ராம் வேகம் (4 GB RAM)- S8+ 6 ஜிபி ராம் வேகம் (6 GB RAM)- S8 - 64 ஜிபி உள் சேமிப்பு திறன் (64 GB Internal Memory)- S8+ 128 ஜிபி உள் சேமிப்பு திறன் (128 GB Internal Memory)- 256 ஜிபி வரை எஸ்டி கார்ட் வசதி (256 GB expandable microSD)- 12 மெகா பிக்சல் கேமரா (பின்பக்கம்) (12MP Primary camera)- 8 மெகா பிக்சல் கேமரா (முன் பக்கம்) (8 MP front camera)- வைபை, ப்ளூடூத் 5.0, டைப் சி சார்ஜ்ர் (Wifi, Bluetooth 5v, Type C reversible connector)- யுஎஸ்பி விரலி (USB OTG Pen-drive)- கைரேகை பாதுகாப்பு சென்சார் (Fingerprint security sensor)- கருவிழி பாதுகாப்பு சென்சார் (Iris scanner)- S8 - 3000 mAh பேட்டரி (Li-Ion 3000 mAh battery)- S8+ 3500 mAh பேட்டரி (Li-Ion 3500 mAh battery)

சாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா