ads

வாட்சப்பில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சம்

பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாட்சப்பில் பயனாளரின் ரகசிய தகவல்களும் பரிமாறப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தனிநபர் தகவலை பாதுகாக்க புதிய அம்சத்தை வாட்சப் வழங்கியுள்ளது.

பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாட்சப்பில் பயனாளரின் ரகசிய தகவல்களும் பரிமாறப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தனிநபர் தகவலை பாதுகாக்க புதிய அம்சத்தை வாட்சப் வழங்கியுள்ளது.

பேஸ்புக்கின் செயலிகளும் ஒன்றான வாட்சப் பொது மக்கள் அனைவரும் ஆன்லைன் உதவியுடன் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் பரிமாற்றத்திற்காக துவங்கப்பட்ட ஒரு செயலியாகும். 2009இல் ஆரம்பிக்கப்பட்டு 9 வருடங்களாக செயல்பட்டு வரும் வாட்சப் முதலில் ஆண்டிராய்டு மற்றும் iOS தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது லேப்டாப், கணினி போன்றவற்றில் உபயோகப்படுத்தும் வகையில் இணையதளத்திலும் செயல்பட்டு வருகிறது.

வாட்சப் செயலியானது பெரும்பாலும் அவசர காலங்களில் பெரிதும் உதவியானதாக உள்ளது. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வாட்சப்பில் ஆன்லைன் உதவியுடன் வாய்ஸ் கால், வீடியோ கால் மற்றும் மெசேஜ் போன்றவற்றின் உதவியுடன் தெரிந்தவர்களுடன் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கிறது. ஆனால் இந்த வாட்சப்பில் வாடிக்கையாளர்கள் தங்களது ரகசிய தகவல்களையும் பரிமாறி கொள்வதால் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது புதியதாக 'End-to-End Encryption' என்ற முறையில் 'Security by Default' என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் தாங்கள் அனுப்பும் மெசேஜை உங்களையும், மெசேஜ் பெறும் நபரையும் தவிர வேறு எவரும் காண முடியாது. நீங்கள் அனுப்பும் மெசேஜ் என்கிரிப்ஷன் என்ற முறையில் பெறும் நபரை அடையும். இந்த தகவலை பெறும் நபர் பார்க்க 'Special Key' உதவியுடன் அதனை அன்லாக் (Unlock) செய்து தான் பார்க்க வேண்டும். இந்த புதிய பாதுகாப்பு அம்சம் ஆண்டிராய்டு மற்றும் iOS இயங்கு தலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கு உங்களுடைய வாட்சப் செயலியை பிளே ஸ்டார் உதவியுடன் அப்டேட் செய்தால் போதும்.

வாட்சப்பில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சம்