ads

இதோ வாட்சப்பின் புதிய அப்டேட் குறித்த முழு விவரங்கள்

பயனாளர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் வாட்சப் சில புது அப்டேட்களை வழங்க உள்ளது.

பயனாளர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் வாட்சப் சில புது அப்டேட்களை வழங்க உள்ளது.

தகவல் பரிமாற்று செயலியான வாட்சப் தங்களது பயனாளர்களின் பயன்பாட்டை அதிகரிக்க செய்யும் வகையில் புது புது அம்சங்களை வழங்கி வருகிறது. வாட்சப் செயலியானது Chats, Calls மற்றும் Status  போன்ற மூன்று வகையான பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. ஸ்டேட்டஸ் பிரிவில் அன்றைய நாளில் அவருடைய  விருப்பமான வீடியோ, கவிதை மற்றும் புகைப்படத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும், கால்ஸ் பிரிவில் விருப்பமானவர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை உபயோகித்து பேசவும் மற்றும் சேட்ஸ் பிரிவில் நண்பர்கள், குரூப்கள் போன்றவற்றில் கலந்துரையடவும் உபயோகப்படுத்த பட்டு வருகிறது.

சமீபத்தில் வாட்சப் செயலி மூலம் பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்தியது. தனது பயனாளர்களுக்கு வாட்சப் செயலி எளிமையாக இருக்கும் வகையில் புது புது அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டெலிட் எவ்ரிஒன் (Delete For Everyone), சேட் பில்டர் (Chat Filters), குரூப் அட்மின் (Group Admin) மற்றும் ப்ராட்கேஸ்டிங் மெசெஜ்ஸ் (Broadcasting Messages) போன்ற புதிய அம்சங்களை விரைவில் வழங்க உள்ளனர்.  டெலிட் எவ்ரிஒன் (Delete For Everyone) அம்சமானது ஒரு தகவல் அல்லது மெசேஜை இரண்டுக்கும் மேற்பட்ட குரூப்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தால் அந்த மெசேஜை அனைவரின் சேட் பிரிவில் இருந்தும் டெலிட் செய்ய 1 மணி, 8 நிமிடங்கள், 16 வினாடிகள் என்ற கால காலஅவகாசமாக குறைத்துள்ளது. முன்னதாக இந்த மெசேஜ் டெலிட் செய்ய 1 நாள், 1மணி, 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகள் தேவைப்பட்டது. இதனை தற்போது குறைத்துள்ளது. நீங்கள் வாட்சப்பில் இந்த மெசேஜை டெலிட் செய்ய கோரிக்கை (Request) அனுப்பியவுடன், இந்த மெசேஜ் எத்தனை பேருக்கு, எவ்வளவு நேரத்தில், எந்த அடையாளத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை வாட்சப் தரவு தலத்தில் (Whatsapp Database) குறிப்பிட்ட நேரத்தை வைத்து ஆராயும். பின்னர் தகவல்கள் சரியாக இருந்தால் இந்த மெசேஜ் குறிப்பிட்ட நேரத்தில் டெலிட் செய்யப்படும். 

சேட் பில்டர் (Chat Filters) அம்சமானது, வாட்சப் பிசினஸ் செயலியில் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தேடுதல் பொறியில் பில்டர் வசதியை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்கு Unread chats, Groups மற்றும் Broadcast lists போன்ற வசதிகள் காண்பிக்கப்படும். இதற்கேற்றாற்போல் நீங்கள் இந்த பிசினஸ் செயலியில் தகவல்களை தேடலாம்.

இந்த புதிய குரூப் அட்மின் (Group Admin) அப்டேட்டில், ஒரு குரூப்பில் அட்மின் அனுப்பும் மெசேஜ் மற்றும் தகவல்களை குரூப்பில் உள்ள இதர உறுப்பினர்கள் அதனை பார்க்க மட்டுமே முடியும். இதர உறுப்பினர்கள் அட்மின் அனுப்பும் மெசேஜ்களை நீக்கவோ, திருத்தவோ முடியாது.

ப்ராட்கேஸ்டிங் மெசெஜ்ஸ் (Broadcasting Messages) அம்சமானது, வாட்சப் பயனாளர்கள் தங்களது காண்டாக்ட் பட்டியலில் உள்ள நபர்களுக்கு இந்த Broadcasting Messages எனப்படும் ஒளிபரப்பு செய்திகளை அனுப்பலாம். 

இந்த அப்டேட்களை வாட்சப் ஏற்கனவே கூகுள் பிளேஸ்டோரில் அப்டேட் செய்து விட்டது. ஆனால் அதனை பயனாளர்கள் உபயோகப்படுத்தாமல் இருக்க முடக்கியுள்ளது. விரைவில் இந்த அப்டேட்களை பயனாளர்களுக்கு வழங்க உள்ளனர். இந்த அப்டேட்களை பெற பிளேஸ்டோரில் வாட்சப் புது அப்டேட்டை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

வாட்சப் பிசினஸ் ஆப் பயனாளர்களுக்கு வழங்கவுள்ள சேட் பில்டர்ஸ் புதிய அம்சம்வாட்சப் பிசினஸ் ஆப் பயனாளர்களுக்கு வழங்கவுள்ள சேட் பில்டர்ஸ் புதிய அம்சம்
வாட்சப் வழங்கவுள்ள டெலிட் எவ்ரிஒன் மெசேஜ்களை நீக்கும் புதிய அம்சம்வாட்சப் வழங்கவுள்ள டெலிட் எவ்ரிஒன் மெசேஜ்களை நீக்கும் புதிய அம்சம்
வாட்சப்பின் புதிய பிராட்கேஸ்டிங் மெசேஜ்கள் வசதிவாட்சப்பின் புதிய பிராட்கேஸ்டிங் மெசேஜ்கள் வசதி

இதோ வாட்சப்பின் புதிய அப்டேட் குறித்த முழு விவரங்கள்