ads
ப்ளஸ் 2 பொது தேர்வில் தமிழகம் முழுவதும் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற 1907 பள்ளிகள்
வேலுசாமி (Author) Published Date : May 16, 2018 09:48 ISTEducation News
தமிழகம் முழுவதும் ஒன்றரை மாதமாக மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காத்திருந்த ப்ளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று காலை 9:30 மணிக்கு முன்னதாகவே ப்ளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதன் பிறகு அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடத்திலும், ஈரோடு மாவட்டத்தில் 96.3 சதவீத தேர்ச்சியை பெற்று இரண்டாவது இடத்திலும், திருப்பூர் மாவட்டத்தில் 96.1 சதவீத தேர்ச்சியை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை தராதவர்கள் வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதியில் மறுதேர்வு எழுதவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 9 லட்சத்திற்கும் மேலானோர் எழுதிய இந்த பொது தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
http://tnresults.nic.in http://dge1.tn.nic.in