ads
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியல்
வேலுசாமி (Author) Published Date : Feb 21, 2018 15:46 ISTHealth News
பூமியில் உள்ள நீரின் அளவானது 71 சதவீதம்,மீதமுள்ள 29 சதவீதத்தில் இருக்கும் நிலங்களில் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம். இதில் காடுகள், மலைகள் குன்றுகள், பாலைவனம் போன்றவை தவிர 10 சதவீத நிலங்கள் மட்டுமே மனித வாழ்விடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும், தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் காடு, நிலங்கள் அழிந்து வருகின்றது.
போதிய மரங்கள் மற்றும் தாவரங்கள் இல்லாததால் ஒவ்வொரு வருடமும் மழையின் அளவும் குறைந்து வருகிறது. இதனால் ஏராளமான இடங்களில் குடிநீர், விவசாயம் போன்றவை படிப்படியாக அழிந்து வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மக்களோ இன்னும் சினிமா, அரசியல் போன்றவற்றின் பின்னால் தான் ஓடி கொண்டிருக்கின்றனர். மேலும் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளால், கழிவு நீர் வெளியேற்றம், காற்று மற்றும் சுற்று சூழல் மாசுபாடு முதலியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்ப அதிக மாசடைந்த 20 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா நான்கு இடங்களை பிடித்துள்ளது. காற்று மாசுபாட்டை ஆய்வாளர்கள் காற்றில் உள்ள துகள்களின் அளவை பொறுத்து கணக்கிடுகின்றனர். இதன் முதற்கட்டமாக மனித தலைமுடியில் 30இல் ஒரு பங்கு அளவுக்கு கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் PM2.5 என்ற மாசு துகள் மீது ஆய்வாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
ஏனெனில் இந்த வகை துகள்கள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இந்த துகள் மூலம் நமது நுரையீரல்கள் மற்றும் இரத்தக் குழாய்களுக்குள் நுழைந்து மனிதர்களுக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றன.தற்போது உலக சுகாதார அமைப்பு PM2.5 மற்றும் PM10 துகள்களால் மாசடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் PM2.5 மாசு அடிப்படையில் ஈரானில் உள்ள ஷபோல் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது .2016-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தில் 1,34,590 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்நகரத்தில் மட்டும் ஆண்டிற்கு 120 நாட்கள் மணல் புயல் வீசும். இதனை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில இந்தியாவின் குவாலியர், அலகாபாத் ஆகிய இரு நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இதன் பிறகு நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாட் மற்றும் ஜுபைல் ஆகிய இரு நகரங்கள் உள்ளது. இதனை தொடர்ந்து ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தை இந்தியாவில் உள்ள பாட்னா மற்றும் ராஜ்புர் ஆகிய இரு நகரங்கள் நிரப்பியுள்ளது.
இதற்கு அடுத்த படியாக காற்றில் கலந்துள்ள பெரிய துகள்களை(PM10) வைத்து காற்றுமாசுபாட்டை அளவிடுகின்றனர், PM10 துகள் பெரியவகை மாசு துகள்களாக இருந்தாலும் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப்பட்டு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.இந்த PM10 துகளால் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் நைஜீரியாவின் ஒனிட்சா என்ற நகரம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் பெஷாவர் என்ற நகரம் உள்ளது.
இந்த பட்டியலில் ஈரானின் ஷபோல் நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த குவாலியர் நகரம் 10வது இடத்தல் உள்ளது. இந்த தரவரிசையின்படி டெல்லி 25வது இடத்திலும், சீனாவின் பெய்ஜிங் 125வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் மாசடைந்த நகரங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 4.5 கோடி குழந்தைகள் உள்பட 55 கோடி மக்கள் வசித்து வருவதாக இந்திய பசுமை வாரியம் தெரிவித்துள்ளது.