ads

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும் மாதுளை

childrens daily food

childrens daily food

குழந்தைகளின் உடல்நலத்தை பராமரிக்க தாய்மார்கள் பெரிதும் போராடுகின்றனர். அதுவும் குழந்தை பருவம் என்பதால் யார் சொல்வதையும் கேட்காமல் அடம்பிடிப்பார்கள், நாம் குழந்தைகளை எதுவும் செய்யாதே என்று சொல்வோமோ அதைத்தான் குழந்தைகள் முதலில் செய்வார்கள். இந்த குழந்தை பருவம் என்பது மிகவும் சந்தோசமான பருவம். இந்த பருவத்தில் சீரான ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானது. ஏனென்றால் தற்போது உள்ள குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைபாட்டினால் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் சந்தோசத்தை தவிர்த்து வீட்டில் முடங்கும் அவல நிலை ஏற்படுகிறது. 

இந்த வகையான ஊட்ட சத்துகளை அளிக்க தினமும் ஒரு பழவகைகளை சாப்பிட்டாலே போதும் அவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிக்கலாம். இதில் மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் நலன்களை பற்றி அறிவோம்.

மாதுளை குழந்தைகளுக்கு வரும் செரிமான பிரச்சனையை சரி செய்யும். குழந்தைகளின் உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும். புழுக்கள் இருந்தால் குழந்தைகள் சாப்பிடும் உணவை உறிஞ்சிவிடும். அப்படி புழுக்கள் இருப்பின் மாதுளம் பழ ஜுசை தருவதன் மூலம் குடல் புழுக்களை வெளியேற்றலாம். இந்த மாதுளை ஜுஸ் காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய சத்துக்கள் முக்கியமானவை. இதிலுள்ள ஆன்டி -ஆக்சிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவற்றை தடுக்கும்.

மேலும் மாதுளையில் உள்ள ஆன்டி - வைரஸ் மற்றும் ஆன்டி - பாக்டிரியா குழந்தைகளின் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவும். பாக்டிரியா, நுண்ணியிரிகள் மற்றும் அலர்ஜிகளை உண்டாகும் கிருமிகளை மாதுளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனால் மாதுளையை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் பல்வேறு நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

cute childrenscute childrens

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும் மாதுளை