ads

இந்தியாவில் 5 லட்ச மக்களுக்கு மேல் காற்று மாசுபாட்டால் இறப்பு

இந்தியாவில் 5 லட்ச மக்களுக்கு மேல் காற்று மாசுபாட்டால் இறப்பு

இந்தியாவில் 5 லட்ச மக்களுக்கு மேல் காற்று மாசுபாட்டால் இறப்பு

காற்று மாசுபாட்டினால் உலகத்தில் மொத்தம் 1.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும்  PM 2.5 காற்று மாசுபாட்டினால் சுமார் 5,24,680 பேர் இறந்துள்ளாக பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வின்படி தெரிய வந்துள்ளது. இது போன்ற நிலைமை நீடித்தால் இறப்புகள் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. ஆய்வின்படி சுற்றுசூழல் பேரழிவுகளால் 2000-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 129 பில்லியன் டாலர் மதிப்பிற்கு பொருட்சேதம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் இந்த காற்று மாசுபாடு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள், போக்குவரத்து, கப்பல், வீடு, வேளாண்மை போன்ற பல்வேறு மூலங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றது. இந்த 5,24,680 சிறப்புகளில் குறைந்தபட்சம் 1,24,207 பேர் காற்று மாசுபாட்டாலும் 80,368 பேர் மின்  உற்பத்தி நிலையங்களாலும்,  50,905 பேர் போக்குவரத்தாலும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த 21 நூற்றாண்டில் ஏராளமானோர் ஆரோக்கியமில்லாமல் இருப்பதற்கு ஊட்டசத்து இல்லாமல் போனதும், கோதுமை மகசூலில் 6% குறைந்ததாலும், நெல் உற்பத்தியில் 10% குறைந்ததாலும் அதிகபடுத்தியுள்ளது. இந்த காற்று மாசுபாட்டினால் ஏராளமானோர் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வருவதாகவும், இந்த காற்றை சுவாசிப்பதனால் நுரையிரல் மற்றும் இதயம் பாதிப்படைந்து இறுதியில் கேன்சர் மற்றும் பிளட் பிரஷர் போன்ற வியாதிகளை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் நுரையிரல் மற்றும் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பூண்டு, செடிகளில் விளையக்கூடிய பழங்கள், பருப்பு வகைகள், வெங்காயம் மற்றும் காளிபுலவர் போன்ற சத்துமிகுந்த உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புசக்தி அதிகப்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளனர். 

இந்தியாவில் 5 லட்ச மக்களுக்கு மேல் காற்று மாசுபாட்டால் இறப்பு