ads
மீனவர்களின் கரம் காப்போம் கண்ணீர் துடைப்போம் - நடிகர் ஜிவி பிரகாஷ்
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 11, 2017 22:42 ISTஇந்தியா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓக்கி புயலால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் காணாமல் போயினர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலுக்குள் சென்ற மீனவர்களின் நிலைமை என்னவென்றே தெரியாமல் அவர்களது குடும்பமும் அரசாங்கமும் தத்தளிக்கிறது. அதில் காணாமல் போன மீனவர்கள் மற்ற கடற்கரை ஓரங்களில் தங்கியுள்ளனர் என்று அவ்வப்போது தகவல்கள் வருகிறது. ஆனால் அதில் சில மீனவர்களின் இறந்த உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை நேற்று ஆட்சியர் சஜ்ஜன்சிங் பார்வையிட்டார். அங்கு மீனவர்கள் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் மற்றும் அனைத்து மீனவ மக்கள் ஒன்று திரண்டு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது நாகப்பட்டினத்தில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் மத்திய மாநில அரசு அக்கறை காட்டவில்லை என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு நாட்டில் பல்வேறு அமைப்பு மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் மீனவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக தனது கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
"நான் நேற்று கன்னியாகுமரிக்கு சென்று பார்த்தபோது போராட்டங்களில் சிறுவயது பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை தங்களது உறவினர்களை பறிகொடுத்து நிற்கின்றனர். பணம் எல்லாம் வேண்டாம் அவர்கள் உயிருடன் கரை திரும்ப மாட்டார்களா என்று கண்ணீருடன் மக்கள் கதறுகின்றனர். புதுசு புதுசா தொழில்நுட்பம் வளர்ந்திருச்சுனு சொல்றாங்க..புயல் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்னாள் தான் சொல்றாங்க.. ஒரு வாரத்திற்கு முன்னால சொல்லியிருந்தா..கடலுக்குள்ளேயே அனுப்பியிருக்க மாட்டோம் என்று ஒரு பெண் கதறுகிறார். அரசாங்கம் அதன் வழியில் உதவட்டும், நாம் நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். கரம் காப்போம் கண்ணீர் துடைப்போம்." என்று தெரிவித்துள்ளார்.
#SaveTNFishermen #Kanyakumari ... share friends .. do read pic.twitter.com/FFZMTGyMu9
— G.V.Prakash Kumar (@gvprakash) December 11, 2017