ads
இயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை
வேலுசாமி (Author) Published Date : Jun 20, 2018 11:46 ISTஇந்தியா
சென்னை மற்றும் சேலம் வழியாக அமையவுள்ள பசுமை வழிசாலையானது 274கிமீ தொலைவில் சேலம், அரூர், தீர்த்தமலை, செங்கம், ஆரணி, செய்யாறு, மணிவாக்கம் வழியாக சென்னை வரை அமையவுள்ளது. 10000 கோடி செலவில் அமையவுள்ள இந்த 8வழிசாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னதாக தொடங்கிய இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தியாவில் மும்பை-தானே சாலைக்கு பிறகு இரண்டாவதாக அமைய உள்ள இந்த பசுமை வழிச்சாலை மூலம் 5 மாவட்டங்களில் மட்டும் 40ஆயிரத்திற்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வீடு மற்றும் நிலங்கள் அழிக்கப்படுகிறது.
தற்போது தீவிரமடைந்து வரும் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் சமூக வலைத்தளங்களில், இயற்கை மற்றும் விவசாயத்தை அழித்து எதற்காக இந்த பசுமை வழிச்சாலை அமையவேண்டும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்களின் நலனுக்காக சென்னை-சேலம் வரை செல்லும் பயணிகளின் ஒரு மணிநேரத்தை மிச்ச படுத்த அமைக்கப்படும் இந்த 8 வழிசாலைக்கு எதிராக ஏராளமான சமூக நல அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
எங்கள் அனைவரையும் கருணை கொலை செய்துவிட்டு இந்த திட்டத்தை துவங்குங்கள் என்று விவசாயிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகர் மற்றும் சமூக ஆர்வலரான விவேக் தனது டிவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இயற்கையை அழிக்காமல் பசுமை வழிசாலையை அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவருடைய டிவிட்டரில் "தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯à®®à®¾à®©à®®à¯ à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®®à¯ தானà¯. ஆனால௠காடà¯à®•à®³à¯,வயலà¯à®•à®³à¯ அழிவத௠மகà¯à®•à®³à¯à®•à¯à®•à¯à®®à¯ விவசாயதà¯à®¤à¯à®•à¯à®•à¯à®®à¯ பெரà¯à®®à¯ அபாயம௠அலà¯à®²à®µà®¾? பிரேசில௠போல௠மாறà¯à®±à¯ à®à®±à¯à®ªà®¾à®Ÿà¯à®Ÿà®¿à®²à¯ பாலமாக போட இயலà¯à®®à®¾? பொறியியல௠வலà¯à®²à¯à®©à®°à¯à®•à®³à¯ சிநà¯à®¤à®¿à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®•à®¿à®±à¯‡à®©à¯. pic.twitter.com/MXTQpFZ6fn
— Vivekh actor (@Actor_Vivek) June 20, 2018