ads

சென்னை சேப்பாக்கம் மைதானம் விளையாட்டு களமாகுமா போராட்ட களமாகுமா

தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 11வது சீசன் போட்டிகள் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து வரும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் போராட்டங்களால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. அரசாங்கமும், அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மக்கள் (தமிழர்கள்) தங்களது உரிமைக்காக ஒரு மாதங்களை கடந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

சோறு போடும் விவசாயிகளுக்காக, தமிழின உரிமைக்காக போராடும் பொது விளையாட்டு அவசியமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு தமிழகம் முழுவதும் ஏராளாமானோர் ஆதரவு தெரிவித்து சோறா?..ஸ்கொரா?.. என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்கள். இந்நிலையில் இன்று இரவு 8:00 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

ஆனால் தமிழகத்தில் விளையாட்டை விட தற்போது காவிரி நீர் தான் அவசியம் தேவைப்படுகிறது. இதற்காக விளையாட்டை புறக்கணித்து போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் சென்னை அணியை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊரில் காண உள்ளதால் போட்டியை காண ஆர்வமாக உள்ளனர். மறுபுறம் சென்னை மைதானத்தில் போராட்டங்களை மீறி ஐபிஎல் நடத்தினால் மைதானத்தின் உள்ளே போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு மைதானத்தினுள் செல்போன், பேனர், கோடி போன்ற எந்த பொருளும் எடுத்து செல்ல கூடாது என்று தடை விதித்த நிலையில் தற்போது மைதானத்தில் செல்போன் மட்டும் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது. விரைவில் தொடங்கவுள்ள இந்த போட்டிக்காக ஏராளமானோர் ஆர்வமாகவும், கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில மணிநேரங்களே இருக்கும் நிலையில் சேப்பாக்கம் மைதானம் விளையாட்டு களமாகுமா, போராட்டக்களமாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் அனைவரிடமும் காணப்படுகிறது. 

சென்னை சேப்பாக்கம் மைதானம் விளையாட்டு களமாகுமா போராட்ட களமாகுமா