ads

பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?

இன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு நாள். கடந்த வருடம் நவம்பர் 8-இல் மோடி கருப்புப்பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொண்டார். இன்று முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதை டிசம்பர் 31குள் வங்கிகளுக்கு சென்று  மாற்றிவிட வேண்டும் என்று அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையினால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்று முதல் வங்கிகளின் வாசலில் பழைய நோட்டுகளை மாற்ற நாள்கணக்கில் தவித்தனர். ஏராளமான கூட்ட நெரிசல்களும் இந்த திட்டத்தை சமாளிக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிப்போயினர்.  பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் சுமார் 55 உயிர்கள் பறிபோயின. கருப்புப்பணத்தை ஒழிக்க மக்கள் இதை பொறுத்து கொள்ள வேண்டும் என்று மோடி தெரிவித்தார். 

இதனை அடுத்து ரிசர்வ்வங்கி தங்கள் ஆண்டறிக்கையில்,15.4 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளில் 15.3 லட்சம் கோடி ருபாய் நோட்டுகள் அதாவது 99% பழைய நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக அறிவித்தது. 3 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை 250 நாட்களுக்கு மேல் ஆகியும் எண்ணி முடிக்கவில்லை. எங்களிடம் போதிய இயந்திரம் இல்லை என்றும் கூறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் 99% நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக கூறியது சற்று இடிக்கிறது. இதன் மூலம் கருப்பு பணம் முழுமையாக ஒளிக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த கருப்பு பணத்தை விட 2016-17 ஆண்டுகளில் கருப்பு பணம் 20.7% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பழைய நோட்டுகளை மாற்ற சொன்னதுதான் முக்கிய காரணம் என்று ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது.  

இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் டிஜிட்டல் பரிவர்த்தனை தான். இதன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை அதாவது கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் வாலட் சேவைகளின் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு புதிய 2000 நோட்டுகள் தான் பெறமுடியும் என்று அறிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த சேகர் ரெட்டியிடம் மட்டும் கட்டு காட்டாக அதுவும் புதிய 2000 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்  சிங் "ருபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை திட்டமிட்ட கொள்ளை" என்று எதிர்ப்பு தெரிவித்தார். மன்மோகன் சிங்கின் இந்த எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லீ நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் குறைந்துள்ளது. மேலும் உயர்ந்த இலக்குடன் ஒரு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது நியாயமானவை. இதனால் ருபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை திட்டமிட்ட கொள்ளை என்று கூறுவது தவறு என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும் சாதாரண மக்களின் தாக்கம் பெருமளவு உள்ளது. அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் சாதாரண மக்களை சார்ந்ததாக இருப்பதில்லை. மக்களுக்காகவே அரசும் அதிகாரிகளும் ஆனால் இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் சாதாரண மக்கள் அடிபணிய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?