ads
பிரதமர் மோடிக்கு கடிதம் - டிசம்பர் 31-குள் இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வேலுசாமி (Author) Published Date : Nov 03, 2017 15:49 ISTWorld News
இந்தியா
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று பி.கே. என்ற ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட 11 நாடுகள் பேரழிவைச் சந்திக்கும். இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் நிலநடுக்கமானது 180 மைல்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருக்கும் இதனால் பலத்த மழை பெய்யும். இந்த கண்காணிப்பு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி இ.எஸ்.பி என்ற கருவியுடன் மேற்கொள்ளப்பட்டது என்றும் பி.கே ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த பாபு கலையில் தெரிவித்துள்ளார்.
இதுவரை உலகம் கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய சுனாமி தாக்கும். இந்தியா, இலங்கை உள்ளிட்ட வளைகுடா நாடுகளோடு சேர்த்து 11 நாடுகள் பெருத்த சேதத்தைச் சந்திக்கும். இதே பி.கே ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியை சுனாமி நிகழ்வதற்கு முன்கூட்டியே இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றது. அரசு இதனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
சென்ற செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி பி.கே ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டரான 'பாபு கலையில்' இந்த எச்சரிக்கையை பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால்வளைகுடா நாடுகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் முக்கியமாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் மிகமிக கவனமுடன் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.