ads
காவிரி நீருக்காக விளையாட்டு மட்டுமல்லாமல் அரசியல் பொழுதுபோக்கு சார்ந்த அனைத்தையும் புறக்கணிப்போம்
வேலுசாமி (Author) Published Date : Apr 19, 2018 17:10 ISTஇந்தியா
பொது மக்களுக்கு பலமான ஆயுதம் இந்த போராட்டம். காவிரி நீருக்காக தமிழகத்தில் நாமும் நீண்ட நாட்களாக போராட்டங்களை நடத்தி கொண்டுதான் வருகிறோம். அதில் தற்போது வரை எந்த பயனும் விளையவில்லை. ஆனால் இந்த போராட்டங்களை திசை திருப்பும் பல்வேறு முயற்சிகளும் நடந்து வருகிறது. அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் உறங்கி விடுகின்றன. எப்பொழுது எழும் என்று தெரியவில்லை. தற்போது தமிழகத்தில் நிகழ்ந்து வரும் போராட்டங்களில் அரசியல் கொடிகளின் ஆதிக்கமே கண்களுக்கு புலப்படுகிறது.
பொது மக்களுக்காக போராடும் போது கூட கட்சி துண்டுகளையும், கொடிகளையும் தவறாது கொண்டு வந்து விடுகின்றனர். இது கேவலமான வருத்தப்படக்கூடிய ஒன்று. இதனால் போராட முற்படும் இளைஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் போராடும் எண்ணத்தையே கைவிடுகின்றனர். தற்போது குளறுபடியான ஒரு போராட்டம் தான் நடந்து கொண்டு வருகிறது. எது எப்படியோ ஒரு வழியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நீருக்காக நாம் போராட்ட களத்தில் இருக்கும் போது ஐபிஎல், சினிமா போன்றவை நிகழ்ந்து வருகிறது.
தொடர் போராட்ட குரலால் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தவிர நாளை முதல் புதிய படங்கள் வெளிவர உள்ளது. காவிரி நீருக்காக, தண்ணீர் கேட்டு விவசாயிகள் கண்ணீர் விடும்போது சினிமா படங்கள் எதற்கு என்று தற்போது மக்களிடையே நடந்து வரும் விவாதம் நியாயமான ஒன்று. போராட்ட களத்தில் இறங்கி விட்டால் சினிமாவை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மதுபான கடைகள் போன்ற அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சினிமா, அரசியல், பொழுதுபோக்கு சார்ந்தவைகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டால் அனைவரும் ஒன்று சேருவோம். நமது குரலும் செவிடனாய் தூங்கி கொண்டிருக்கும் அரசாங்கத்தை தட்டி எழுப்பும்.