ads

காஜியாபாத் தம்பதியின் பிரேத பரிசோதனை தோல்வியில் முடிந்தது

இந்நிலையில் இவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த காவல்துறையினருக்கு வந்த அறிக்கையின் முடிவில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த காவல்துறையினருக்கு வந்த அறிக்கையின் முடிவில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

மேட்ரிக்ஸ் செல்லுலார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் நீரஜ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபின் குளியலறையில் மனைவியுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

நீரஜ் ருச்சி தம்பதியினர் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் குடும்ப வாழ்ககை எந்த குறை இல்லாமல் இருந்தது என்று வீட்டில் அருகில் வசிப்பவர்களிடம் கேட்ட போது கூறினார்கள். இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது, தற்போது குழந்தைக்கு நான்கு வயது. இவர்கள் குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை சந்தோசமாக கொண்டாடியபின் வீட்டிற்கு வந்து குளிக்க சென்றனர். இரவு உணவை ஹோட்டலில் உண்பதற்கான அனைவரும் தயாராகிக் கொண்டிருந்த போது, நீரஜ் மற்றும் ருச்சியிடம் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லாதலால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, இருவரும் குளியல் அறையில் சுயநினைவு இல்லாமல் இருந்தனர்.

அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபின் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் இவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த காவல்துறையினருக்கு வந்த அறிக்கையின் முடிவில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. தம்பதியனரின் மரணம் கொலை போன்று எந்த ஒரு தடயமும் இல்லை, அவர்களின் உடம்பில் எந்த ஒரு காயங்களும் இல்லை, மின்சாரம் தாக்குதலக்கான அறிகுறியும் இல்லை, தற்கொலைக்கு உண்டான காரணங்களும் இல்லை, இவ்வாறு இருக்கையில் இவர்கள் எப்படி இறந்திருக்கக்கூடும் என்ற கேள்வி மர்மமாகவே உள்ளது.

காவல் துறை அதிகாரி கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாதலால், குறிப்பிட்ட உடல் உறுப்புகளை ரசாயன ஆய்வுக்காக அனுப்பியுள்ளதாகவும், இந்த பரிசோதனை அறிக்கை வருவதற்கு குறைந்தது சில நாட்கள் ஆகும் என தெரிவித்தார். மேலும் தம்பதியினரின் அறை மற்றும் குளியல் அறையில் தேவையான தடயங்களை சேகரித்துள்ளதாகவும், புதிய அறிக்கை வந்தபின் குடும்பத்தாரிடம் விசாரிக்க முடியும் என தெறிவித்தார்.

காஜியாபாத் தம்பதியின் பிரேத பரிசோதனை தோல்வியில் முடிந்தது