ads
மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு
ராசு (Author) Published Date : Nov 11, 2017 14:50 ISTஇந்தியா
கவுகாத்தியில் 23-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரி என்ற திட்டத்தை அமல்படுத்தியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்கள் அவதிப்பட்டு ஓய்ந்திருந்த நிலையில் இந்த ஜிஎஸ்டி நடவடிக்கையினால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். இதனால் பெரும்பான்மை தொழிலதிபர்கள் மற்றும் மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை ஏற்றத்தை சந்தித்தது.
நாட்டில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அன்றாட மக்களை திணறடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் நாட்டில் கருப்பு பணம் மற்றும் மோசடித்தனம் செய்பவர்கள் எல்லாம் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், இவர்களை குறிவைத்தால் போதுமே அதற்கு கோடிக்கணக்கான மக்களை சட்டம் என்ற பெயரில் அவதிப்படுத்துவதற்கு பதிலாக, சட்டம் போடுவதென்றால் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பதவிகளுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதி இருக்க வேண்டும் என்று சட்டம் பிறப்பித்தாலே போதும் என்று சரமாரியாக எதிர்ப்புகள் கிளம்பின.
இதனை அடுத்து ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வர, 23-வது ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்றது. இதற்கு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமை தாங்கினார். அதன்படி ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படுகிறது. விவசாய டிராக்டருக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்படுகிறது. குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் கீழ் வழங்கும் சத்துமாவு 5 சதவிகித வரிவிதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. திரைப்படம் தொடர்பான சாதனங்கள் 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக கொண்டு வரப்படுகிறது. விளைபொருட்களின் உற்பத்தி கட்டமைப்புக்கான வரி 12 சதவிகிதமாகவும், செங்கல் தொழில் தொடர்பான சில்லரை வேலை மீதான சேவை வரியையும் குறைக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக்கடைகளுக்கான சேவை வரியில் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 பொருட்களை மட்டும் 28 சதவிகித வரியின் கீழ் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. சிகரெட் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், மற்றும் ஆடம்பர பொருட்களுக்கும் 28 சதவிகிதத்திலேயே வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.