ads

சென்னை ஐபில் போட்டிகளை பிசிசிஐ இடமாற்றியது தமிழருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என பாரதிராஜா பெருமிதம்

தமிழருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என பாரதிராஜா பெருமிதம்

தமிழருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என பாரதிராஜா பெருமிதம்

சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் 6 ஐபில் போட்டிகளை சென்னையிலிருந்து வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்திருக்கிறது. இது தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐபில் போட்டிகளை நடத்த விட மாட்டோம் என்று பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, டில்லியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், சென்னையில் நடைபெறவிருந்த மற்ற 6 போட்டிகளையும் இடமாற்றம் செய்ய பிசிசிஐ மற்றும் ஐபில் நிர்வாகம் முடிவெடுத்தது.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழர்களின் எதிர்ப்பை இதுவரை ஆளும் அரசுகளும் அண்டை மாநிலத்தவரும் எவரும் மதிக்கவில்லை. இது தமிழர் நடத்திய அரவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மேலும் தமிழகத்தில் நிலவும் பிற பிரச்னைகளான மீத்தேன், ஸ்டெர்லிட், நியூட்ரினோ உள்ளிட்டவைகளுக்கும் போராடுவோம். அதிலும்  தமிழன் நிச்சயம் வெல்வான்

இரு தினங்களுக்கு முன்பாக , தமிழ் கலை இலக்கிய பண்பாடு பேரவை என்ற அமைப்பை உருவாக்கிய இயக்குனர் பாரதிராஜா, சென்னையில் நேற்று நடந்த ஐபிலுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐபில் போட்டிகளை பிசிசிஐ இடமாற்றியது தமிழருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என பாரதிராஜா பெருமிதம்