ads

100 நாட்களாகியும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராததால் ஒரு வருத்தத்தில் தான் சொன்னேன்

நேற்று தூத்துக்குடி மக்களை சந்திக்க ரஜினிகாந்த் சென்ற போது அவரிடம் யார் நீங்க என்று கேட்ட இளைஞரும் மற்றும் பத்திரிகையாளரிடம் கோபமாக நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று தூத்துக்குடி மக்களை சந்திக்க ரஜினிகாந்த் சென்ற போது அவரிடம் யார் நீங்க என்று கேட்ட இளைஞரும் மற்றும் பத்திரிகையாளரிடம் கோபமாக நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் 100 நாட்களை கடந்து போராடிய மக்களுக்கு கிடைத்த பலனாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூடியது. ஆனால் இந்த செயல் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பத்தை மறைக்கும் ஒரு நாடகம் தான் என்று எதிர்க்கட்சிகளும், பல பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போராட்டத்தின் போது மக்களுடைய போராட்டத்திலும், காவல் அதிகாரிகளின் படையிலும் சில அரசியல் வாதிகளால் ஊடுருவப்பட்ட கலகக்காரர்களால் தூத்துக்குடி போராட்டம் கலவரமாகவும், ரத்த வெள்ளமாகவும் மாறியது.

இந்த போராட்டத்தின் போது ஏராளமானோர் படுகாயமடைந்தனர், 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்களும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களை கமல்ஹாசன், எடப்பாடி ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இவர்களை தொடர்ந்து நேற்று ரஜினிகாந்தும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 2 லட்சம் நன்கொடையும், படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் படுகாயமுற்ற இளைஞரை சந்தித்த போது யார் நீங்க? என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ நேற்று முதல் தற்போது வரையிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தவிர நேற்று சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் கோபமாக நடந்து கொண்டதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. வரும் ஜூன் 7இல் காலா வெளியாகவுள்ளது. இதுதவிர விரைவில் அரசியலிலும் களமிறங்கவுள்ளார். இதனால் காலா ப்ரோமோஷனுக்காகவும், அரசியல் காரணத்திற்காகவும் தான் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்றார் என்று நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து தனது டிவிட்டரில் "விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று யார் நீங்க? என்று கேட்ட இளைஞரும் நேற்று நடந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் "நேற்று யார் நீங்க என்று கேட்டதை சில பத்திரிகைகாரங்களும், மீடியா ஆள்களும் வீணாக தவறாக சித்தரித்து வைரலாக்கி விட்டனர். நான் அப்படி கேட்டதற்கு அர்த்தம் உள்ளது. மற்ற அரசியல் வாதிகள் விட ரஜினிகாந்த் என்றாலே மக்கள் அனைவரிடத்திலும் நல்ல ஒரு பெயரும் மரியாதையும் இருக்கிறது. அப்படி இருக்கையில் 100 நாட்களை கடந்து மக்கள் போராடும் போது மக்களுக்கு ஆதரவாக களமிறங்காததால் ஒரு ஆதங்கத்தில் தான் கேட்டேன். இதனை மீடியா காரர்கள் தவறாக சித்தரித்து விட்டனர். இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு தான் பாதிப்பு எழுகிறது" என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் அனைவர் மத்தியிலும் ஒரே கவலை என்னவென்றால், கோடி கணக்கான செல்வாக்கும், ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தையும் கொண்டுள்ள நடிகர், நடிகைகள் போராட்டத்தின் போது மக்களுக்கு ஆதரவாக களமிறங்காமல் டிவிட்டர் பேஸ்புக் போன்ற தலத்தில் மட்டுமே கருத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது தான். அதிலும் சிலருக்கு அந்த எண்ணம் கூட வருவதில்லை. இப்படி மக்கள் அடிப்படை தேவைக்காக போராடும் போது அனைத்து பிரபலங்களும் தேவையில்லை ஒரு 10 பேர் களத்தில் இருந்தால் போதும் 100 நாட்களை கடந்த போராட்டம் 10 நாளை கடந்திருக்காது என்பதே அந்த இளைஞரின் ஆதங்கம்.

100 நாட்களாகியும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராததால் ஒரு வருத்தத்தில் தான் சொன்னேன்