ads

ரஜினிகாந்த் கட்சி சின்னம் பாபா முத்திரையாக இருக்கலாம்

rajinikanth party logo

rajinikanth party logo

நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஆறு நாட்களாக 31-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்தித்தார். ஒவ்வொரு நாளும் 1000 ரசிகர்கள் வீதம் சந்தித்து புகைப்படங்களை எடுத்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி முதல் நாள் தனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி 31-ஆம் தேதி அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார். இதனை அடுத்து புத்தாண்டின் முந்தைய நாள் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் தெரிவித்துள்ளார். அதில் "நமது நாட்டில் ஊழல் அதிகாரம் தலையோங்கி விட்டது. முதலில் அதை மாற்ற வேண்டும். ஒரு கட்சிக்கு தொடர்கள் மிகவும் முக்கியம் ஆனால் எனக்கு தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை தீர்க்க காவலர்கள் வேண்டும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். 

சாதி மத சார்பற்ற 'ஆன்மீக' அரசியலாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் தரப்பில் பல்வேறு விதமான விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தது. நான் அரசியலுக்கு வரு வது உறுதி என்று சொன்னவுடன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தீபாவளி போல் கொண்டாடினர். மேலும் கட்சியின் பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முன்னதாக மறைந்த நடிகர் எம்ஜிஆருக்கு தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு அதிக ரசிகர் மன்றம் நடிகர் ரஜினிகாந்துக்கு தான் உள்ளது. முதல் ரசிகர்மன்றம் மதுரையில் உள்ளது. பின்னர் சென்னையில் நற்பணிகள் செய்வதற்கு ரசிகர்மன்றம் தொடங்கப்பட்டது. 

தற்போது பதிவு செய்யப்பட்ட 23 ஆயிரம் ரசிகர்மன்றங்கள் ரஜினி பெயரில் உள்ளது. மேலும் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள் 27,000 உள்ளது. இந்த 50,000 ரசிகர் மன்றங்களையும் ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. ரசிகர் மன்றத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளது. அரசியல் களம் காண்ட உறுப்பினர்களுக்கு மாநில அளவில் பதவிகள் வழங்கப்படலாம். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் ஆன்மிகம் சார்ந்ததாக இருக்கும். இவருடைய கட்சி சின்னம் பற்றி அனைவரிடமும் ஒரே பேச்சு தான் அடிபடுகிறது. 'பாபா' படத்தில் இடம்பெற்ற கை சின்னம் மக்கள் மத்தியில் 'பாபா முத்திரை' என்று அழைக்கப்பட்டுவருகிறது. ரசிகர்மன்றங்களில் இந்த 'பாபா முத்திரையை' உபயோகித்து வருகின்றனர். இதனால் ரஜினிகாந்தின் புதிய கட்சி சின்னம் 'பாபா முத்திரையாக' இருக்கலாம் என்று ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் கட்சி சின்னம் பாபா முத்திரையாக இருக்கலாம்