ads

47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது

இமயமலை சென்று திரும்பிய ரஜினி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இமயமலை சென்று திரும்பிய ரஜினி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பொது மக்கள் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 47 நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில், உற்சாகமாக விளையாடி குழந்தை பருவத்தை அனுபவிக்கும் குழந்தைகள் முதல் நிம்மதியாக அமர்ந்து நினைவுகளை பகிரக்கூடிய முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் போராட்ட களத்தில் களமிறங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் எவரும் களமிறங்காமல் சமூக வலைத்தளத்தில் மட்டும் பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், தூத்துக்குடி போராட்டக்களத்தில் நானும் உள்ளேன், புரட்சி களம் அழைத்தால் நானும் வருவேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தார். இதற்கு பொது மக்கள் "உங்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றில்லை. நீங்கள் அழைக்காமல் முன்னின்று நடத்த வேண்டும். எங்களுக்கு யாரும் தேவையில்லை." என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் கமல் ஹாசனை தொடர்ந்து களமிறங்குகிறார். ஆனால் இவர் இமயமலை, ஆன்மீக பயணம் என்று மக்களை கவனிக்காமல் சுற்றி கொண்டிருக்கிறார். 40 நாட்களுக்கு மேல் போராடியும் இவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இவரின் செயலுக்கு மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இமயமலை சென்று திரும்பிய அவர் காவிரி நதிநீர் விவகாரத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.

இதன் பிறகு தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களுக்கு ஆதராவாக "ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று  47 நாட்களா  அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது" என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் தன்னுடைய கருத்தை பதிவு செய்த பிறகும் 'இத்தனை நாள் எங்கு சென்றீர்கள்' என்றுதான் கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது