ads

இறந்த தனது கணவரை காண பரோலில் வெளிவரவுள்ள சசிகலா

இறந்த தனது கணவரை காண 15 நாட்கள் பரோல் கேட்டு சசிகலா மனு.

இறந்த தனது கணவரை காண 15 நாட்கள் பரோல் கேட்டு சசிகலா மனு.

'புதிய  பார்வை' பத்திரிகையின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன், நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

இவருடைய கல்லீரல், சிறுநீரகம் போன்றவை செயலிழந்து அதனை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் தஞ்சையில் விபத்தில் உயிரிழந்த வாலிபர் ஒருவரின் உடலுறுப்புகள் பெறப்பட்டு நடராஜனுக்கு உடலுறுப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறிய அவர் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.

ஆனால் கடந்த 17-ஆம் தேதி இரவு நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் போன்றவற்றால் கடும் அவதிப்பட்டுள்ளார். இதன் பிறகு உறவினர்கள் அவரை முன்பு சிகிச்சை பெற்ற குளோபல் மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய சிறுநீரகம் செயலிழந்த நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் தீவிர சிகிச்சை மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இவருடைய உடல் பொதுமக்களின் பார்வைக்காக பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து இவருடைய உடல் நடராஜனின் சொந்த ஊரான விளாறுக்கு கொண்டு செல்ல படுகிறது. முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது கணவரை சந்திக்க சசிகலா பரோல் கேட்டு மனு கொடுத்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் பிறகு தற்போது அவரது கணவர் உயிரிழந்ததை அடுத்து நடராஜனின் இறப்பு சான்றிதழ் வந்த பிறகு சசிகலா பரோலில் அனுப்பப்படுவார் என தகவல்கள் வெளியாகிறது.

இறந்த தனது கணவரை காண பரோலில் வெளிவரவுள்ள சசிகலா