சுமார் 180 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

       பதிவு : Nov 09, 2017 13:02 IST    
சுமார் 180  இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சசிகலா, தினகரன் மற்றும் ஜெயா டிவி அலுவலகம் உள்பட சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் இன்று காலை முதல் வருமானவரி துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். வருமானம் குறித்து முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே போல் தினகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி, கொட நாடு எஸ்டேட், வேளச்சேரி பீனிஸ்க் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், தஞ்சை டாக்டர் வெங்கடேஷ் வீடு, பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, மன்னார்குடி திவாகரன் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு, தினகரன் மாமனார் சுந்தரவதனம், தஞ்சையில் உள்ள வக்கீல் வேலு கார்த்திகேயன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. இதனை அடுத்து தினகரன் ஆதரவாளர்கள் இந்த சோதனைக்கு காரணம் மத்திய அரசு தான் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


சுமார் 180 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்