ads

பசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்

சேலம் சென்னை பசுமை வழிசாலையை எதிர்த்து சிறைத்தண்டனை பெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில் கிடைத்துள்ளது. ஆனால் மன்சூர் அலி கானுக்கு மட்டும் பெயில் மறுக்கப்பட்டுள்ளது.

சேலம் சென்னை பசுமை வழிசாலையை எதிர்த்து சிறைத்தண்டனை பெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில் கிடைத்துள்ளது. ஆனால் மன்சூர் அலி கானுக்கு மட்டும் பெயில் மறுக்கப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைத்தண்டனை அடைந்த சுற்றுசூழல் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவரை சேலம், ஓமலூர் துணை நீதிமன்றம் பெயிலில் விடுத்துள்ளது. ஆனால் அவருடன் சிறைத்தண்டனை அடைந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு மட்டும் பெயில் மறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து சேலம் சென்னை பசுமை வழிசாலையை எதிர்த்து ஆத்திரமாக பேசியதால் அவரின் பெயில் மனு மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 3 ஆம் தேதி நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஆகியோர் உள்ளூர் மக்களை தூண்டுவதற்கு முயற்சித்ததாக தும்பிப்படி கிராம நிர்வாக அலுவலரான வீராசாமி என்பவர் அவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவருடைய புகாரின் பேரில் காவல் துறையினர் மே3இல் அரசாங்கத்தின் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த மே3இல் பொது மக்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய போது "தங்களது நிலங்களை அரசு அதிகாரிகள் கையகப்படுத்த அனுமதிக்க கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் நான் 8பேரை வெட்டி கொலை செய்யவும் தயங்க மாட்டேன்" என்று ஆத்திரமாக பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சிற்கு பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் நடிகர் மன்சூர் அலிகான் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவருடன் இணைந்து இந்த திட்டத்தை எதிர்த்து தும்பிப்பட்டி, பொட்டியாபுரம், சிக்கனம்பட்டி போன்ற கிராமங்களில் உள்ள மக்களிடம் இந்த திட்டத்தின் அபாயங்களை எடுத்துரைத்துள்ளார். இதனால் தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த போலீசார் இருவர் மீதும் பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தூண்டுதல் அளித்தல்), 183 (சட்டரீதியாக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தல்), 189 (அரசு அதிகாரிகளை மிரட்டுதல்) மற்றும் 506 II (கிரிமினல் அச்சுறுத்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவருக்கு மட்டும் பெயில் கிடைத்துள்ளது. ஆனால் மன்சூர் அலிகானுக்கு பெயில் மனு மறுக்கப்பட்டுள்ளது. சேலம்-சென்னை பசுமை வழிசாலையானது பாரதமாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உத்தரவால் தமிழக அரசு 277.30 கிமீ தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அமைந்தால் விவசாயம் அளிக்கப்படுவது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைகிறது.

இதனால் தங்களது நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாய மக்கள் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.  ஆனாலும் மக்களின் நிலைமை புரியாமல் அரசாங்கம் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த திட்டத்தை எதிர்த்து பல சமூக நல அமைப்புகள் போராடி வரும் நிலையில் மீடியாக்களும், பொது மக்களும் கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சமூக ஆர்வலரான பியூஸ் மனுஷ் என்பவர் தமிழ்நாட்டை சார்ந்தவர் அல்ல.

ஆனாலும் நமது தமிழக விவசாயிகளுக்காகவும், சுற்றுசூழல் பாதுகாப்புக்காகவும் தொழிற்சாலைகளையும், அரசாங்கத்தையும் எதிர்த்து கடுமையாக போராடி வருகிறார். இதே போன்று கரூரை சேர்ந்த  நடிகர் மன்சூர் அலிகான், பல ஆண்டுகளாக பொது மக்களுக்காக போராடி பல முறை சிறை தண்டனை பெற்றுள்ளார். ஆனால் மீடியா மற்றும் தமிழக மக்கள், இளைஞர்கள் சினிமாவிலும், சீரியலிலும் மூழ்கி கிடப்பது வேதனையாக உள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்த பட்டால் தமிழகத்தில் கொஞ்ச நஞ்ச விவசாயிகளும் அழிக்கப்பட்டு விவசாயம் என்பது இனி வரலாற்றில் மட்டுமே காணப்படும் என்பதில் ஐயமில்லை.

பசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்