ads

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு

தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வந்த இந்திய கடற்படையினர்  துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து படுகாயமடைந்த மீனவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக கடற்படையினர் கொலை வழக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்திய கடற்படையினரை எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய கடலோர காவல்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர். 

மீனவர்கள் ஹிந்தி தெரியாமல் மீன் பிடித்தால் சுட்டுக்கொள்வோம் என இந்திய கடற்படையினர் மிரட்டியதாகவும்  மீனவர்கள் மீது ரப்பர் குண்டை வைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் மீனவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து நாங்கள் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை, இந்திய கடற்படை கப்பலில் இருந்து எந்த ரப்பர் குண்டையும் வீசவில்லை என இந்திய கடற்படை மறுத்துள்ளது. மீனவர்கள் படகை நிறுத்த மறுத்ததால் அவர்களிடம் எச்சரிக்கை மட்டுமே விடுத்ததாக இந்திய கடற்படையினர் தரப்பில் தெரிவித்துள்ளது. 

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு